மேலும் அறிய

Watch Video: Phone pe-இல் பிச்சை எடுத்த பிச்சைகாரர்! வியந்த பார்த்த மக்கள் - அசாமில் சுவாரஸ்யம்!

அசாமில் போன்பே மூலம் பிச்சைக்காரர் ஒருவர் பிச்சை எடுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

போன்பே மூலம் உதவி கேட்கும் பிச்சைக்காரர்:

இந்தியாவில் எந்த மூலைக்குச் சென்றாலும், கையில் பணமே வேண்டாம். வங்கிக் கணக்கில் பணமும், அதோடு இணைக்கப்பட்டுள்ள ஒரு செல்போனும் மட்டுமே, கையில் இருந்தால் போதும் என்ற சூழலை யுபிஐ சேவை ஏற்படுத்தியுள்ளது. மாநகரங்களில் உள்ள பெரும் கடைகளில் மட்டுமின்றி, உள்ளூரில் உள்ள பொட்டிக் கடை வரையும் ஒரு க்யூஆர்கோடை ஸ்கேன் செய்து பணத்தை செலுத்திவிடலாம். இதனால், இந்திய பணப்பரிவர்த்தனை தற்போது அதிவேகமாக டிஜிட்டல் மயமாகிறது. 

சொல்லப்போனால் இன்னும் பிச்சைக்காரர்கள் மட்டும் தான் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை பயன்படுத்தாமல் இருப்பதாக பேச்சு வழக்கில் சொல்லதுண்டு. ஆனால், தற்போது பிச்சைகாரர்களும் ஜிபே, போன்பே மூலமாக பிச்சை எடுத்து வருகின்றனர். இது சம்பந்தமான வீடியோகளும் இணையத்தில் தீயாய் பரவுகின்றன.

இந்த சம்பவம் வேறு எங்கேயும் இல்லை. நம் இந்தியாவில் தான்.  அசாம் மாநிலம் கவுகாத்தியில் சிக்னலில் நிற்கும் கார்களில் பிச்சை எடுக்கும் பார்வையற்ற நபர் ஒருவர், போன்பே மூலமாக உதவி கேட்டும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் வீடியோ:

தஷ்ரத் என்ற நபர், தனது கழுத்தில் போன் பே ஸ்கேனரை தொங்கவிட்டப்படி, சிக்னலில் காத்திருக்கும் வாகன ஓட்டிகளிடம் பிச்சை கேட்கிறார். இந்த சம்பந்தமான வீடியோவில், கவுகாந்தி சிக்னலில் பார்வையற்ற நபர், கழுத்தில்  போன்போ ஸ்கேனரை தொங்கவிட்டப்படி, பிச்சை கேட்கிறார்.

அப்போது, சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டியும் போன்பே மூலமாக 10 ரூபாயை அவருக்கு அளிக்கிறார். இந்த வீடியோ தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சியின் கவுரவ் சோமானி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் பதிவிட்டிருப்பதாவது, ”டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எல்லைகள் கிடையாது. பிச்சைக்காரர் ஒருவர் டிஜிட்டர் பரிவர்த்தனை மூலமாக உதவி கேட்கிறார். சமூக பொருளாதாரம் என்ற தடைகளை தாண்டி செல்லும் ஆற்றல் தொழில்நுட்பத்திற்கு உள்ளது என்பதற்கான சான்று இது” என்றார்.   

சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் இந்த வீடியோ 1,300 பேர் பார்த்துள்ளனர். இதற்கு நெட்டிசன்கள், பார்வையற்ற நபருக்கு உதவி செய்யலாம் என்று கூறுகின்றனர். சிலர், இவர்கள் எல்லாம் பிச்சைக்காரர்கள் இல்லை. இதை ஒரு வேலையாக செய்கின்றனர்.  இந்த மாதிரியான நபர்களால், சாப்பிட வழியாமல் பிச்சை எடுக்கும் பிச்சைக்காரர்கள் சிரமப்பட்டு வருகின்றனர் என்றும் கூறி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு: ஓணம் தரிசனம் எப்போது?விவரம் இதோ..
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
ரூ 2,000க்கு மேல் UPI Payment செய்தால் கட்டணம்? விரைவில் வெளியாகும் புதிய அறிவிப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!
செப்டம்பர் 1 முதல் கார் விலை உயர்வு! டாடா, ஹூண்டாய் கார்கள் வாங்க இதுவே கடைசி வாய்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: 10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
10 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை; இன்றைய வானிலை நிலவரம் இதோ
Pete Hegseth: பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
பதவி விலகும் அமெரிக்க ராணுவ செயலாளர்.? டென்ஷனில் பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்; காரணம் என்ன.?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Embed widget