Covid cases | 5 நாட்களில் 250 சிறுவர்களுக்கு கொரோனா.. அச்சமூட்டும் பெங்களூரு..!
பெங்களூருவில் கடந்த 5 நாட்களில் 250 சிறுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் என கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாத இறுதி முதல் கொரோனா இரண்டாவது அலை பரவத் தொடங்கியது. கடந்த மே மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் மாநில அரசுகள் மேற்கொண்ட ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது.
இருப்பினும், உலகம் முழுவதும் கொரோனா மூன்றாவது அலை பரவுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பும், மருத்துவ நிபுணர்களும் அவ்வப்போது எச்சரித்து வருகின்றனர். குறிப்பாக 3வது அலையில் சிறுவர்கள், குழந்தைகள் பாதிக்கப்படலாம் என மருத்து அமைப்புகள் யூகிக்கின்றன. இந்நிலையில் பெங்களூருவில் கடந்த 5 நாட்களில் 250 சிறுவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 5 முதல் ஆகஸ்ட் 10 வரையில், 19 வயதுக்குட்பட்ட 250 சிறார்களுக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேதி வாரியாக:
ஆகஸ்ட் 5
0 to 9 வயது - 21 நபர்கள்
10 to 19 வயது - 38 நபர்கள்
ஆகஸ்ட் 6
0 to 9 வயது - 32 நபர்கள்
10 to 19 வயது - 34 நபர்கள்
ஆகஸ்ட் 8
0 to 9 வயது - 13 நபர்கள்
10 to 19 வயது - 25 நபர்கள்
ஆகஸ்ட் 9
0 to 9 வயது -- 18 நபர்கள்
10 to 19 வயது - 24 நபர்கள்
ஆகஸ்ட் 10
0 to 9 வயது - 18 நபர்கள்
10 to 19 வயது - 27 நபர்கள்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 1964 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 25,81,094 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 243 பேரும், கோயம்பத்தூரில் 229 பேரும்,,ஈரோடில் 164 பேரும், செங்கல்பட்டில் 140 பேரும் நோய்த் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். கடந்த சில நாட்களாக குறைந்து வந்த மாநிலத்தின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 77 நாட்களுக்குப் பிறகு, சென்னையின் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கோயம்புத்தூரை விட கடந்த 24 மணி நேரத்தில் அதிகரித்துள்ளது.
குணமடைவோர் எண்ணிக்கை: கடந்த 24 மணிநேரத்தில் 1917 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25,26,317 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கோவிட்19 தொற்று கொண்டவர்களில் இதுவரை 97.87% குணமடைந்துள்ளனர்.