கங்கை தூய்மை செய்யும் திட்டத்திற்காக மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம்....!
அடுத்த மாதம் அக்டோபர் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் "pmmementos.gov.in" என்ற இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம்.
![கங்கை தூய்மை செய்யும் திட்டத்திற்காக மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம்....! Around 1200 gifts to Prime Minister Modi to be online auctioned from today கங்கை தூய்மை செய்யும் திட்டத்திற்காக மோடியின் 1,200 பரிசு பொருட்கள் ஏலம்....!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/17/b410d9f17502e2221151c37779f01ff81663399232327109_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டின் 40 சதவிகித மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவியாக இருக்கும் கங்கை நதியை தூய்மை படுத்த நிதி திரட்டும் நோக்கில் பிரதமரின் பிறந்த நாளான இன்று அவருக்கு இதுவரை வந்த பரிசு பொருட்களை ஏலத்தில் விடுகிறார்கள்.
நமாமி கங்கை திட்டம்
கடந்த 2019-2020 ஆண்டில் சுமார் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கி கங்கை நதியை தூய்மையாக்கும் திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், இதற்கான நிதி தேவை மேலும் அதிகரித்து வந்தது. அதற்காக இந்த ஏலத்தின் மூலம் நிதி திரட்டி கங்கை நதியை சுத்தம் செய்ய பயன்படுத்தப்பட உள்ளது. தூய்மை கங்கை திட்டம் என்பது இந்தியாவின் ஒரு கனவு திட்டம் ஆகும். நாட்டின் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரத்திற்கு அடிப்படையாக இந்த நதி இருக்கிறது. ஆனால் இந்த நதியின் நீர் பயன்பாட்டிற்கு ஏற்றதல்ல என பல ஆய்வுகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அதனால் இந்நதியை சீரமைத்து மறு பயன்பாட்டுக்கு கொண்டு வர 'நமாமி கங்கை திட்டம்' உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்கு எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் நிதி தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
1200 பரிசுப்பொருட்கள்
இந்த தூய்மை திட்டத்திற்கு உலக வங்கி சுமார் 400 பில்லின் டாலர் உதவி செய்வதாக அறிவித்திருந்தது. அப்போதும் நிதி பற்றாத காரணைத்தால் இது போன்ற விஷயங்களின் மூலம் நிதி திரட்டப்படுகிறது. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) முதல் 1,200 பரிசு பொருட்கள் ஆன்லைன் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
தொடர்புடைய செய்திகள்: பரவி வரும் வைரஸ் காய்ச்சல்: பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை அறிவிப்பு
எப்படி பங்கேற்பது?
அடுத்த மாதம் அக்டோபர் 2-ந்தேதி வரை ஆன்லைன் மூலம் நடைபெறும் இந்த ஏலத்தில் "pmmementos.gov.in" என்ற இணையதளம் மூலம் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஏலத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்களில் சில பொருட்கள் தற்போது டெல்லியில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கிரண் ரெட்டி தகவல்
இன்று பிரதமர் நரேந்திர மோடி தனது 72வது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில், இந்த திட்டத்திற்கு நிதி திரட்டும் நோக்கில், பிரதமர் மோடியின் பரிசு பொருட்கள் ஏலத்தில் விடப்படும் என்று மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் பேசுகையில், "பிரதமருக்கு பரிசாக கிடைக்கப் பெற்ற விநாயகர் சிலை, அயோத்தி ராமர் சிலை, வரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மாதிரி ஆகியவை மின்னணு ஏலத்தில் விடப்படுகின்றன. இதில் கிடைக்கும் நிதி அப்படியே 'நமாமி கங்கை' திட்டத்திற்கு பயன்படுத்தப்படும்" என்றார். இந்த பரிசு பொருட்கள் பட்டியலில் ஏகப்பட்ட ஸ்வாரஸ்யமான பொருட்கள் உள்ளன. சமீபத்தில் டெல்லியில் மோடி, நேதாஜி சிலையை திறந்து வைத்தபோது இந்த சிலையை வடித்த சிற்பி யோகிராஜ், நேதாஜி சிலையின் மாதிரியை பரிசாக பிரதமருக்கு கொடுத்தார். இது உட்பட பல ஸ்வாரஸ்யமான பரிசு பொருட்கள் ஏலத்தில் இடம் பெறுகின்றன. சர்வதேச அளவில் நடைபெற்ற காமன்வெல்த், பாராலிம்பிக் மற்றும் தாமஸ் கோப்பை உள்ளிட்ட போட்டிகளில் போட்டியிட்டு பதக்கம் மற்றும் கோப்பைகள் வென்ற விளையாட்டு வீரர்கள் பிரதமரை சந்தித்தபோது சில பரிசுகளை வழங்கினர், அந்த பொருட்களும் இந்த ஏலத்தில் இடம் பெறுகின்றன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)