மேலும் அறிய

APSRTC: பஸ் ஸ்டாப் கூட போக வேண்டாம்.. வீடு தேடி வரும் அரசு பேருந்துகள்.. சூப்பரான திட்டம் அறிவிப்பு!

முதலில் விஜயவாடாவிலும், பின்னர் மாநிலம் முழுவதுலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் இதில் பயனடைவார்கள்.

ஆந்திர மாநில போக்குவரத்துத்துறை வீட்டிலிருந்தே பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதியை வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான சோதனை முயற்சியானது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. 

கடைக்கோடி கிராமங்களை இணைக்கும் பேருந்துகள்

பெருநகரங்கள் தொடங்கி கடைக்கோடி கிராமம் வரை போக்குவரத்து சாதனமாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசால் இயக்கப்படும் சாதாரண கட்டணம் தொடங்கி தொலை தூரம் வரை செல்லும் பேருந்துகள், தனியாரால் இயக்கப்படும் பயணிகள் பேருந்து, சொகுசு வசதிகள் ஆம்னி பேருந்து என பல தரப்பட்ட பேருந்துகளை நாம் பார்த்திருப்போம், பயணித்திருப்போம். இத்தகைய பேருந்துகளில் ஏறி, இறங்க குறிப்பிட்ட இடங்களில் பேருந்து நிறுத்தம், பேருந்து நிலையம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கும். நாம் ஏதேனும் இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால் இந்த இடங்களுக்கு சென்றே நம்மால் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முடியும். 

வீடு தேடி வரும் அரசு பேருந்துகள்

இப்படியான நிலையில் பயணிகளை சிரமத்தைக் குறைக்கும் பொருட்டு ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகமான ஏபிஎஸ்ஆர்டிசி புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்துள்ளது. அதாவது  வீட்டிலிருந்தே பயணிகளை ஏற்றிச்செல்லும் வசதியை வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. முதற்கட்டமாக விஜயவாடா நகர எல்லைக்குள் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு இதற்கான சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. 

இதுதொடர்பாக போக்குவரத்து அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, “பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குவதற்காக  APSRTC புதிய நடவடிக்கைகளை அடிக்கடி எடுத்து வருகிறது. அந்த வகையில் நீண்ட தூரம் நடந்து வந்து பயணம் மேற்கொள்வதை குறைக்கும் வகையில்  பயணிகளின் வீட்டு வாசலிலேயே பேருந்துகளை அழைத்துச் செல்லும் வசதியை வழங்கத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. 

முதற்கட்டமாக தொலைதூர பேருந்துகளில் தொடக்கம்

தொலைதூர இடங்களுக்குச் செல்லும் பேருந்துகளில் பத்துக்கும் மேற்பட்ட பயணிகள் ஒரே பகுதிக்குள் இருந்து முன்பதிவு செய்திருந்தால் அவர்களை அழைத்துச் செல்ல ஒரு பேருந்து அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. சொகுசு பேருந்து, ஏசி, ஸ்லீப்பர் பேருந்துகள் தொலைதூர இடங்களுக்குச் சேவை வழங்குகின்றன. அதிகப் பொருட்கள் இருக்கும்போது பேருந்து நிறுத்தம் செல்வது மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. இது பயண நேரத்தை அதிகமாக மாற்றுகிறது. ஒருவரால் மற்றொருவரும் சிரமப்படும் சூழல் உள்ளது. 

நிச்சயமாக இந்த திட்டம் மக்களுக்கு கைகொடுக்கும் என நம்பப்படுகிறது. முதலில் விஜயவாடாவிலும், பின்னர் மாநிலம் முழுவதுலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்யும் பயணிகள் முன்கூட்டியே போக்குவரத்து அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான சோதனை முயற்சிகளை விரைவில் செயல்படுத்த அதிகாரிகள் கடுமையாக முயற்சி மேற்கொண்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

சபரிமலை வெடி வழிபாடு ரத்து: வனவிலங்குகள், பக்தர்கள் பாதுகாப்பு உறுதி!
சபரிமலை வெடி வழிபாடு ரத்து: வனவிலங்குகள், பக்தர்கள் பாதுகாப்பு உறுதி!
ரூ.30 கோடி ஓணம் பம்பர் லாட்டரி: வரி, கமிஷன் போக கையில் ரூ.15 கோடி மட்டுமே!
ரூ.30 கோடி ஓணம் பம்பர் லாட்டரி: வரி, கமிஷன் போக கையில் ரூ.15 கோடி மட்டுமே!
கிழிந்த 500 ரூபாய் நோட்டா? முழுப் பணத்தையும் பெற RBI விதிகள் இதோ! தெரிந்துகொள்ளுங்கள்!
கிழிந்த 500 ரூபாய் நோட்டா? முழுப் பணத்தையும் பெற RBI விதிகள் இதோ! தெரிந்துகொள்ளுங்கள்!
ஒரு பயங்கரவாத நாடு இதை கேட்கலாமா? - பாகிஸ்தான் நிருபரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெய்ஷங்கர்!
ஒரு பயங்கரவாத நாடு இதை கேட்கலாமா? - பாகிஸ்தான் நிருபரை வெளுத்து வாங்கிய அமைச்சர் ஜெய்ஷங்கர்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
மதுராந்தகம் தவெக கோட்டை... வாக்குகளை அள்ளுவோம்.. உறுதியாக தெரிவித்த ஆதவ் அர்ஜூனா!
Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
“பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
TVK IT Wing: பொய்யிற் சிறந்த பெருமானே.. கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க.. ஸ்டாலினுக்கு தவெக பதிலடி!
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
அக்டோபர் முதல் புதிய நடைமுறை.! ஆதார் இணைந்த கணக்கில் மட்டுமே உதவித்தொகை- பயனாளிகளுக்கு அலர்ட்
Poonamallee-Vadapalani Metro rail : அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
அடி தூள்.! வடபழனி–பூந்தமல்லி மெட்ரோ திறப்பு தேதி அறிவிப்பு.! எந்தெந்த நிலையங்களில் ரயில் நிற்கும் தெரியுமா?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (26.09.2026): கேரளா திருவோணம் பம்பர் லாட்டரி: முதல் பரிசு மட்டும் ரூ.30 கோடி- அடுத்தடுத்து யாருக்கு?
Consecutive holidays : 3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
3 நாள் தொடர் விடுமுறை.! அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்- சூப்பர் அறிவிப்பு இதோ..
PROPERTY TAX TAMILNADU : சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
சொத்து வரி செலுத்த செப்.30 கடைசி நாள்.! வரி கட்ட ஈசியான வழிமுறை- மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு
Embed widget