Chennai Mayor Priya : “பர்கர் சாப்பிட்டாலும் சர்ச்சை… தலைமுடி வெட்டினாலும் விமர்சனமா?” சென்னை மேயர் பிரியா வேதனை
Chennai Mayor Priya : ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது. எனவே, நான் வகிக்கும் ‘மேயர்’ பதவியைத் தாண்டி, என்னை முதலில் ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதராகவும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஏன் சர்ச்சையாகிறது? -மேயர் பிரியா
சென்னை மாநகர மேயராக இருப்பவர் பிரியா, அரசு நிகழ்வுகள், கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போது எடுக்கப்படும் வீடியோக்களை சமூகவலைதளத்தில் ஒரு சிலர் பதிவிட்டு விமர்சித்து வருகிறார்கள். அந்த வகையில் நேற்றைய தினம் மாநாகராட்சி கூட்டத்தில் மேயர் பிரியா கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைதளத்தில் பரவி வருகிறது. அதில் மேயர் பிரியாவின் தலைமுடியை விமர்சித்தும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சென்னை மேயர் பிரியா வெளியிட்டுள்ள பதிவில், “நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் ஏன் சர்ச்சையாகிறது? முதல் நாளிலிருந்து இன்று வரை, மிகவும் சாதாரணமான தனிப்பட்ட விஷயங்கள்கூட பிரச்சினையாக்கப்படுகின்றன. நான் ஒரு பர்கர் சாப்பிட்டாலும் விமர்சனம் செய்கிறார்கள், தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் விமர்சனம். நான் எடுக்கும் ஒவ்வொரு தனிப்பட்ட முடிவும் கேள்விக்குள்ளாக்கப்பட்டு, விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
பர்கர் சாப்பிட்டாலும் விமர்சனம், தலைமுடியை வெட்டிக்கொண்டாலும் விமர்சனம்
சில நேரங்களில், நான் ஒரு பெண் என்பதாலா அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலா இந்த அணுகுமுறை என யோசிக்க வேண்டியுள்ளது. பெண்களின் உரிமைக்காக குரல் கொடுப்பதாகக் கூறுபவர்கள், என்னைப் போன்ற பெண்கள் எதிர்கொள்ளும் சூழலில் எங்கே செல்கிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. அரசியலில் இருக்கும் பெண்கள் குணக்குறைவானவர்கள் அல்ல; அவர்கள் யாருக்கும் குறைவான மரியாதைக்குரியவர்களும் அல்ல. பொது வாழ்வில் இருக்கும் ஒரு பெண் என்பதற்காக, அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட தேர்வுகளை அடிப்படையாகக் கொண்டு அவரை மதிப்பிடவோ, கேள்வி கேட்கவோ யாருக்கும் உரிமை இல்லை.
Why is it always me?
— Priya (@PriyarajanDMK) September 26, 2026
Whatever I do seems to become a controversy. From day one until today, even the simplest things become an issue. If I eat a burger, it’s an issue. If I cut my hair, it’s an issue. Every personal choice I make seems to be questioned and judged.
Sometimes I…
‘மேயர்’ பதவியைத் தாண்டி, என்னை முதலில் ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதராகவும் மதியுங்கள்
ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கென ஒரு கண்ணியம், சுயமரியாதை மற்றும் தனது வாழ்க்கையைத் தனது விருப்பப்படி வாழும் உரிமை உள்ளது. எனவே, நான் வகிக்கும் ‘மேயர்’ பதவியைத் தாண்டி, என்னை முதலில் ஒரு பெண்ணாகவும், ஒரு மனிதராகவும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















