Andhra Pradesh Captial: ஆந்திராவின் தலைநகரமாக இனி விசாகப்பட்டினம்.. அதிரடியாக அறிவித்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி..!
Andhra Pradesh New Capital: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி.
Andhra Pradesh New Capital: ஆந்திராவின் தலைநகரமாக விசாகப்பட்டினத்தை அறிவித்தார் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி. விசாகப்பட்டினத்தை தலைநகராக அறிவிக்கப்பட்டதன் மூலம் 3 தலைநகரம் திட்டம் கைவிடப்பட்டது.
ஆந்திர மாநிலம் கடந்த 2014 ம் ஆண்டு ஜூன் மாதம் இரண்டாக பிரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விரைவில் அரசு அலுவல் நடவடிக்கைகள் அனைத்தும் விசாகப்பட்டினத்துக்கு மாற்றப்படும் என ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
#WATCH | "Here I am to invite you to Visakhapatnam which will be our capital in the days to come. I will also be shifting to Visakhapatnam in the months to come": Andhra Pradesh CM YS Jagan Mohan Reddy at International Diplomatic Alliance meet in Delhi pic.twitter.com/wANqgXC1yP
— ANI (@ANI) January 31, 2023
ஆந்திர பிரதேசத்தின் புதிய தலைநகர் விசாப்பட்டினம் என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அறிவித்தார். இதுகுறித்து டெல்லியில் நடந்த சர்வதேச தூதரக கூட்டணி கூட்டத்தில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவிக்கையில், “ வரும் நாட்களில் எங்கள் தலைநகராக இருக்கும் விசாகப்பட்டினத்திற்கு இதோ உங்களை அழைக்கிறேன். வரும் மாதங்களில் நானும் விசாகப்பட்டினத்திற்கு மாறுவேன். மார்ச் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் இந்த உலக முதலீட்டாளர் மாநாட்டை நாங்கள் அங்கு ஏற்பாடு செய்கிறோம்” என்று தெரிவித்தார்.
ஆந்திராவில் முதலீடு செய்த அனைவருக்கும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி நன்றி தெரிவித்துள்ளார். தொழிற்சாலைகள் அமைக்க அரசு சார்பில் எந்த விதமான ஆதரவையும் வழங்கத் தயாராக இருப்பதாக முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்தார். இந்தச் சந்தர்ப்பத்தில், ஆந்திராவில் முதலீடு செய்வதற்கான சாதகமான சூழ்நிலைகள் குறித்து முதலீட்டாளர்களுக்குத் தெரிவித்தார். கடந்த 3 ஆண்டுகளாக எளிதாக தொழில் தொடங்குவதில் ஆந்திர மாநிலம் முதலிடத்தில் இருப்பதாக ஜெகன் தெரிவித்தார். நாடு முழுவதும் நிறுவப்படும் 11 தொழில்துறை நிறுவனங்கள் ஆந்திராவுக்கு வருவதாக அவர் கூறினார்.
ஆந்திர மாநிலம் நீண்ட கடலோரப் பகுதியைக் கொண்டிருப்பதாகவும், 11.43 சதவீத வளர்ச்சியுடன் நாட்டிலேயே வேகமாக வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார். சிங்கிள் டெஸ்க் முறையில் 21 நாட்களுக்குள் தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்குகிறோம் என்றார். வரும் நாட்களில் விசாகப்பட்டினம் தலைநகராக மாறும் என்றும், அடுத்த சில மாதங்களில் அங்கிருந்து ஆட்சியை தொடருவேன் என்றும் முதலமைச்சர் ஜெகன் தெரிவித்தார்.
ஆந்திர பிரதேசம்:
ஆந்திரப் பிரதேசம் 2014ல் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. புதிய தெலுங்கானா மாநிலம் உதயமானது. அப்போது, பிரிக்கப்படாத ஆந்திராவின் தலைநகரான ஐதராபாத்தை, தெலுங்கானா கைப்பற்றியது. 2015ல் ஆந்திராவின் அப்போதைய என் சந்திரபாபு நாயுடு கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள விஜயவாடா-குண்டு பகுதியின் ஒரு பகுதியான அமராவதியை தலைநகராக அறிவித்தார். இதன் பிறகு, 2020ல் அமராவதி, விசாகப்பட்டினம் மற்றும் கர்னூல் ஆகிய மூன்று நகரங்களை தலைநகராக வைக்க முடிவு செய்யப்பட்டது.