Nipah Virus: நிபா வைரசுக்கு எதிரான எதிர்ப்புத்திறன் வவ்வால்களிடம் உள்ளது : வெளியான புதிய தகவல்..
கேரளா வந்திருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எனப்படும் ஐசிஎம்ஆர், வௌவால்களின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்துச்சென்றதோடு அதனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைத்திருந்தனர்.
கேரளாவில் நிபா வைரஸின்(Nipah Virus) தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் இதற்கான நோய் எதிர்ப்புச்சக்தி வைரசுக்குக் காரணமான வௌவால்களிடம் இருப்பது ஆய்வின் தெரியவந்துள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகள் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு அச்சுறுத்தத் தொடங்கிய கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. குறிப்பாக இந்தியாவைப்பொறுத்தவரை பல்வேறு மாநிலங்கள் கொரோனா தாக்குதலை கட்டுக்குள் கொண்டு வந்திருந்தாலும் கேரள மாநிலத்தில் இன்னும் குறைந்தபாடில்லை. தினமும் 50 சதவீதத்திற்கு மேலான பாதிப்பு கேரளாவில் இருந்து தான் பதிவாகின்றது என புள்ளி விபரங்கள் குறிப்பிடுகின்றன. இதனைத்தடுக்க கேரள முதல்வர் பினராயி விஜயனும், சுகாதாரத்துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. இருந்தபோதும் தொற்றின் தாக்கத்தினைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் கேரள அரசு திணறி வருகிறது.
ஒருபுறம் கொரோனா தொற்றினால் மக்கள் பாதிப்பைச் சந்தித்துவரும் நிலையில் கேரளத்தில் நிபா , ஜிகா வைரஸ்களும் பரவத்தொடங்கியது. குறிப்பாக கடந்த செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் 12 வயது சிறுவன் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப்பலனின்றி உயிரிழ்ந்தார். இந்நிலையில் தான் கேரளாவிற்கு வந்த மத்திய குழுவுடன் மாநில சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதோடு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குடும்பத்தில் மற்ற யாருக்கும் நிபா வைரஸ் தொற்றின் தாக்கம் ஏற்படவில்லை. இருந்தப்போதும் மேலும் மாநிலத்தில் பரவாமல் இருக்கும் வகையில் ஆலோசனைகள் நடத்தப்பட்டது.
ஏற்கனவே சிறுவன் உயிரிழந்த நிலையில், நிபா வைரஸ் எப்படி ஏற்றுக்கொண்டது என்பதற்கு குறித்து ஆய்வின் முடிவில், சிறுவன் சில தினங்களுக்கு முன்னதாக ரம்புட்டான் பழத்தைச் சாப்பிட்ட பிறகு தான் அவருக்கு நிபா வைரஸ் உறுதியான தெரியவந்துள்ளது. மேலும் வாங்கிய இடத்தில் ஆய்வு நடத்திய போது, ரம்புட்டான் பழங்களில் வௌவால்களின் மூலம் நிபா வைரஸ் பரவியது என்ற செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனையடுத்து வௌவால்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டதோடு, அதற்கு எதிராகப் பிரச்சாரங்களும் முன்னெடுக்கப்பட்டது கேரளத்தில் பெரும் சச்சரவை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான் தற்போது கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ள கருத்து வன விலங்கு ஆர்வலர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன தான் சொன்னார் தெரியுமா? நிபா வைரல் வௌவால்கள் தான் பரவிகிறது என்று அனைவருக்கும் அதற்கு எதிராக இருந்தனர். ஆனால் தற்போது அதற்கு தலைகீழாகவே மாறிவிட்டது. நிபா வைரஸ் குறித்த ஆய்வு நடத்துவதற்காக கேரள வந்திருந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழகம் எனப்படும் ஐசிஎம்ஆர் வௌவால்களின் உடலில் இருந்து மாதிரிகளை எடுத்துச்சென்றதோடு அதனை புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்துக்கு அனுப்பிவைத்திருந்தனர். அங்கு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிபா வைரஸுக்கு எதிரான நோய்த்திறன் அதனைப் பரப்பும் வவ்வால்களின் உடலிலேயே இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்தார். இச்செய்தி வன விலங்கு ஆர்வலர்களுக்கிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.