இறந்த கணவருக்காக கோயில் கட்டிய மனைவி; ஆந்திராவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்..!
அது மட்டுமில்லாமல், வார இறுதி நாட்களில் பத்மாவதி சிறப்பு பிரார்த்தனை செய்து தனது கணவரின் பெயரில் உணவை விநியோகிக்கிறார். தன் கணவர் உயிருடன் இருந்தபோது, அவரை கடவுளாக பார்த்ததாக கூறினார்.
இறந்த கணவருக்காக கோயில் கட்டிய மனைவி, தனது கணவரின் சிலைக்கு தினமும் பூஜை செய்து வரும் நெகிழ்ச்சி சம்பவம் ஆந்திராவில் அரங்கேறி வருகிறது.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தில் பெண் ஒருவர் 'உண்மையான காதல் ஒருபோதும் இறப்பதில்லை' என்பதை நிரூபித்து, இறந்த கணவருக்கு ஒரு கோயிலைக் கட்டியுள்ளார். இந்த கோயில் பளிங்குகளால் ஆனது. அவரது கணவர் அங்கிரெட்டியின் மார்பளவு சிலை உள்ளது. அவர் தினமும் சிலைக்கு முன் பிரார்த்தனை செய்து பூஜை செய்கிறார்.
பிரகாசம் அங்கிரெட்டி மற்றும் பத்மாவதி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். ஆனால், கணவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
பத்மாவதி கணவரின் அகால மரணத்தால் மிகவும் அதிர்ச்சிக்கு ஆளானார். கணவர் மறைந்து நான்கு வருடங்கள் ஆன பிறகும் மன உளைச்சலில் இருந்தார். இருப்பினும், அவர் சமீபத்தில் தனது கணவர் தனது கனவில் வந்து அவருக்காக ஒரு கோயிலைக் கட்டும்படி கேட்டுக் கொண்டார் என்பதை வெளிப்படுத்தினார். உடனடியாக செயலில் இறங்கி, தன் கணவனின் நண்பர் திருப்பதி ரெட்டி மற்றும் தனது மகன் சிவசங்கர் ரெட்டி ஆகியோரின் உதவியைப் பெற்று கணவரின் வடிவத்தில் ஒரு பளிங்கு சிலையை நிறுவினார்.
அப்போதிருந்து, அவர் தினமும் அங்கு பூஜை செய்து குடும்ப நலனுக்காக பிரார்த்தனை செய்து வருகிறார். அது மட்டுமில்லாமல், வார இறுதி நாட்களில் பத்மாவதி சிறப்பு பிரார்த்தனை செய்து தனது கணவரின் பெயரில் உணவை விநியோகிக்கிறார். தன் கணவர் உயிருடன் இருந்தபோது, அவரை கடவுளாக பார்த்ததாக கூறினார்.
பத்மாவதி கணவர் மீது வைத்துள்ள அன்பு மற்றும் அவர் மீதான பக்தியை நெட்டிசன்களின் இதயங்களை நெகிழச் செய்து அவர்களை உணர்ச்சி வசப்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் மிகவும் அர்ப்பணிப்புடன் இருந்த தனது அம்மா, அப்பாவுக்கு மகனாக பிறந்ததற்காக தன்னை பாக்கியசாலியாகக் கருதுவதாகவும், தனது பெற்றோரை ஒரு சிறந்த ஜோடி என்றும் சிவசங்கர் ரெட்டி கூறினார்.
இதேபோன்ற ஒரு சம்பவம் கர்நாடகாவிலும் சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றுள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் குப்தா அவரது மறைந்த மனைவியின் நினைவாக, புதிதாகக் கட்டப்பட்ட அவரது வீட்டில் சிலிகான் மெழுகு சிலையை நிறுவினார். அவர்களின் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டதும். குப்தா தனது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் தனது மனைவி தன்னுடன் இருப்பதை உறுதி செய்ய விரும்பி இவ்வாறு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.