மேலும் அறிய

Shocking Video: தொடரும் ராகிங் கொடுமை.. சக மாணவர் மார்பின் மீது அயர்ன் பாக்ஸால் சூடு.. வெளியான அதிர்ச்சி வீடியோ!

ஆந்திராவில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவரை சக மாணவர்களால் கட்டைகள் மற்றும் பிவிசி பைப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆந்திராவில் இன்ஜினியரிங் மாணவர் ஒருவரை சக மாணவர்களால் கட்டைகள் மற்றும் பிவிசி பைப்பால் தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

ஆந்திராவில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரி ஹாஸ்டல் அறையில் தங்கியிருந்த மாணவர் ஒருவரை சக மாணவர்களால் கட்டைகள் மற்றும் பிவிசி பைப்பால் கொடூரமாக தாக்கியுள்ளனர். மேலும், அந்த மாணவரின் கை மற்றும் நெஞ்சு பகுதிகளில் (அயர்ன் பாக்ஸ்) இரும்புப் பெட்டியால் சுட்டு காயப்படுத்தியுள்ளனர். தாக்கப்பட்டவர் அங்கித் என்றும், தாக்கிய மாணவர்கள் ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பீமாவரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்தவர்கள் என்றும் அடையாளம் காணப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட  மாணவர் மற்றும் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் அந்த தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி அறிவியல் படித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடந்ததாகவும், அந்த மாணவர்கள் தாக்கும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் வைரலானதால் இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

வீடியோவில் காணப்படுவது போல், தாக்கப்பட்ட அந்த மாணவர் தன்னை அடிக்க வேண்டாம் என்று அவர்களிடம் கெஞ்சுவதும், சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்பதும் உள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த மாணவரை மீண்டும் மீண்டும் தாக்குவது வீடியோவில் தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை வேறு யாராவது இணையத்தில் பதிவிட்டார்களா ? அல்லது அவர்களே இந்த சம்பவத்தை பதிவு செய்தார்களா ?  என்பது தெரியவில்லை. மேலும், அந்த மாணவரின் மார்பில் (அயர்ன் பாக்ஸ்) இரும்புப் பெட்டியால் சூடு வைத்ததாகவும், ஈவிரக்கமின்றி கட்டைகள் மற்றும் PVC குழாய்களால் தாக்கியதாகவும், தொடர்ந்து காலால் உதைத்ததும் இந்த வீடியோவில் தெரியவந்துள்ளது. படுகாயம் அடைந்த அந்த மாணவர் பீமாவரத்தில் உள்ள மருத்துவமனையில் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது தொடர்பாக 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த கல்லூரியின் முதல்வர் மற்றும் பொறியியல் கல்லூரி நிர்வாகமோ இந்த தாக்குதல் தொடர்பாக இன்னும் எதுவும் தெரிவிக்கவில்லை. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget