மேலும் அறிய

Ambani Engagement: பிரம்மாண்டமாக நடைபெற்ற அம்பானி வீட்டு நிச்சயதார்த்தம்.. குவிந்த பாலிவுட் நட்சத்திரங்கள்!

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானி தம்பதியின் இளைய மகனான,  ஆனந்த் அம்பானியின் திருமண நிச்சயதார்த்த விழா மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.

அம்பானி வீட்டு திருமணம்:

இந்திய தொழில்துறையில் முன்னணியில் உள்ள அம்பானியின் இளைய மகனான, ஆனந்த் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் ஆற்றல் சார்ந்த வணிகங்களை தலைமை தாங்கி நடத்தி வருகிறார். அவருக்கும், என்கோர் ஹெல்த்கேர் CEO விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகளும், என்கோர் ஹெல்த் கேர் குழுமத்தின் இயக்குனருமான ராதிகா மெர்ச்சன்ட்டிற்கும் திருமணம் செய்ய, இரு குடும்பத்தாரும் முடிவு செய்துள்ளனர். இதையடுத்து, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டிற்குமான குடும்பத்தினர் மட்டும் பங்கேற்ற நிச்சயதார்த்தம், விரேன் குடும்ப வழக்கப்படி ராஜஸ்தானில் கோலாகலமாக நடைபெற்றது.

விழாக்கோலம் பூண்ட அண்டிலியா

அதைத் தொடர்ந்து, மும்பையில் முகேஷ் அம்பானியின் அண்டிலியா வீட்டில், அவரது குடும்ப வழக்கப்படி அதிகாரப்பூர்வ நிச்சயதார்த்த விழா பிரம்மாண்டமாக நேற்று மாலை நடந்தது. இதற்காக இந்தியாவின் மிகவும் விலை உயர்ந்த வீடாக கருதப்படும் அம்பானியின் வீடு, மலர்கள், வண்ண விளக்குகள் மற்றும் பலூன்களால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டு இருந்தது.

நடனமாடி மகிழ்ந்த அம்பானி குடும்பம்:

தொடர்ந்து,  கணபதி பூஜை செய்யப்பட்டு முகேஷ் அம்பானி குடும்பத்தின் பாரம்பரிய வழக்கத்தின்படி நிச்சயதார்த்த விழாவின் முக்கிய நிகழ்வான லகான் பத்ரிகா (திருமண நிச்சய பத்திரிக்கை) வாசிக்கப்பட்டது. பின்னர் பரிசுகளையும் இனிப்புகளையும் இரு குடும்பத்தினரும் மாற்றிக்கொண்டனர். பின்னர் நீதா அம்பானி தலைமையில் அம்பானி குடும்பத்தினர் நடனமாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம்:

பின்னர் ஆனந்த் அம்பானியின் சகோதரி இஷா நிச்சயதார்த்த நிகழ்வை அறிவித்தார். அப்போது, அம்பானி வீட்டின் வளர்ப்பு நாய், நிச்சயதார்த்த மோதிரங்களை கொண்டு வர, குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் ஆனந்த் அம்பானியும், ராதிகா மெர்ச்சன்ட்டும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.

விழாவில் பங்கேற்ற திரை நட்சத்திரங்கள்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற பார்ட்டியில், பாலிவுட்டை சேர்ந்த சல்மான் கான், ஷாருக்கானின் மனைவி கவுரி கான் மற்றும் அவரது மகன்,  ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே தம்பதி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப், சாரா அலி கான், ஜான்வி கபூர், அக்‌ஷய் குமார், ஜான் ஆபிரகாம், வருண் தவான் மற்றும் ஸ்ரேயா கோஷல் என பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்து கொண்டது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget