மேலும் அறிய

School Fees : கொரோனா காலத்தின்போது கட்டப்பட்ட பள்ளிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம்.

உத்தரபிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் கல்விக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தக்கோரி, அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பெற்றோர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுக்களை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் செலுத்தப்பட்ட பள்ளிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் தள்ளுபடி செய்யக் கோரி உத்தரவிட்டுள்ளது.

இந்தியப் பள்ளிகளுக்கான கட்டணம் தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் இந்த தீர்ப்பை வழங்கியுள்ள உயர்நீதிமன்றம். பள்ளிக் கட்டணம் செலுத்தப்படாவிட்டால், அதிகப்படியான தொகையை மாற்றியமைக்க வேண்டும் அல்லது பெற்றோரிடம் திருப்பித் தர வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுக்களில் தற்போது உத்தரவை பிறப்பித்துள்ளது உயர்நீதிமன்றம். தொற்று சமயத்தில் பள்ளி வகுப்புகள் பெரும்பாலும் ஆன்லைனில் நடைபெற்று வந்த நிலையில் சில வசதிகளை பள்ளி நிர்வாகம் வழங்கத் தவறியதாக மனுதாரர்கள் வாதம் செய்தனர். இதன் அடிப்படையில் 2019-20ம் ஆண்டுகளில் அதே பள்ளிக் கட்டணத்தை கேட்பது நியாயமல்ல என பெற்றோர்கள் வாதிட்டனர்.

மனுதாரர்களின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஷாஷ்வத் ஆனந்த் மற்றும் யானேந்திர பாண்டே ஆகியோர் ஏற்கெனவே ஜோத்பூரில் ஒரு பள்ளியில் இதே போன்றதொரு வழக்கில் 2021ம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

School Fees : கொரோனா காலத்தின்போது கட்டப்பட்ட பள்ளிக் கட்டணத்தில் 15 சதவிகிதம் தள்ளுபடி: நீதிமன்றம் அதிரடி

முன்னதாக இதே அலகாபாத் உயர்நீதிமன்றம் விமர்சிக்கப்பட்ட பல தீர்ப்புகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது. திருமணமாகாத இருவர் ஒருவருக்கு ஒருவர் சம்மதத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல. ஆனால், பாவம் என அலகாபாத் உயர்நீதிமன்றம் இரண்டு மாதங்களுக்கு முன்பு தீர்ப்பு அளித்திருந்தது. மைனர் பெண் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட குற்றத்தில் காதலர் ஏதும் நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டில் உயர்நீதிமன்றம் இவ்வாறு கூறியது. உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் தன் காதலனை பார்க்கச் சென்ற 18 வயது நிரம்பாத பெண்ணை இருவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.உத்தரப்பிரதேச மாநிலம் கௌசாம்பியைச் சேர்ந்த 18 வயது நிரம்பாத பெண் ஒருவர் கடந்த பிப்ரவரி மாதம் காலை 8 மணிக்கு தையல் பயிற்சிக்குக் கிளம்பியுள்ளார். தையற்பயிற்சி முடித்து தனது காதலனைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி காதலன் ராஜூவின் பைக்கில் பயனித்த இருவரும் அருகில் ஆறு ஒன்றின் அருகே உள்ள தனிமையான இடத்துக்குச் சென்றுள்ளனர். அப்போது தனது காதலியிடம் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார். அவர் அதற்கு மறுக்கவும் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமை செய்துள்ளார். அப்போது அந்த நேரத்தில் அங்கே வந்த வேறு இருவர் காதலனைத் தாக்கியுள்ளனர். மேலும் காதலன் ராஜூவைத் தனியே பிரித்துவிட்டு அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாகக் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி காதலனுக்கு இந்த வழக்கில் ஜாமீன் தர மறுத்துவிட்டார். மேலும்,’ஒரு காதலனாகத் தனது காதலியைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் அவர் தவறிவிட்டார். மேலும் திருமணமாகாத நிலையில் மைனர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் குற்றம், மேஜர் பெண்ணுடன் சம்மதத்துடன் உறவுகொண்டால் அது ஒழுக்கமின்மை’ என நீதிபதி தனது தீர்ப்பில் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
Anna University: அண்ணா பல்கலை. பேராசிரியர்களை குத்தகைக்கு வாங்குவதா? தற்கொலைக்கு சமமான முடிவு; எழும் கண்டனங்கள்!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
அதானியின் ஒப்பந்தங்கள் கேன்சல்..! கென்ய அதிபர் அதிரடி..!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Embed widget