மேலும் அறிய

Maharashtra Ajit Pawar: மகாராஷ்டிராவில் மீண்டும் வேலையை காட்டிய அஜித் பவார்.. 5 ஆண்டுகளில் 3வது முறையாக துணை முதலமைச்சர் பதவி - வரலாறு என்ன?

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்து மீண்டும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார், பாரதிய ஜனதா கூட்டணியில் சேர்ந்து மீண்டும் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார்.

எதிர்பாராதா கூட்டணி:

மகாராஷ்டிராவில் கடந்த 2019ம் ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில், ஆளுங்கட்சியாக இருந்த பாஜக உள்ளிட்ட எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் அடுத்த ஆட்சி அமைக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு மாநிலம் முழுவதும் நிலவியது. ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவரான அஜித் பவார், கட்சி தலைமைக்கு எதிராக, தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் உடன் சென்று பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்தார்.

ஐந்தே நாட்கள் நீடித்த ஆட்சி:

பரபரப்பான அரசியல் சூழலில் அமைந்த இந்த கூட்டணிக்கு, 2019ம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி அதிகாலையில் ஆளுநர் பதவிபிரமாணம் செய்து வைத்தார். அதன்படி, பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார். ஆனால், சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் 5 நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது. ஆனால், அஜித் பவார் துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற இரண்டே நாட்களில், அவருக்கு எதிராக பாஜக ஆட்சியில் பதியப்பட்ட 9 வழக்குகள் ஊழல் தடுப்பு போலீசாரால் கைவிடபட்டது. 

மகா விகாஸ் கூட்டணி:

தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்த நிலையில், சிவசேனா - காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து மகாவிகாஸ் எனும் கூட்டணியை ஏற்படுத்தி ஆட்சி அமைத்தது. இந்த கூட்டணி ஆட்சி அமைத்தபோது மீண்டும் தேசியவாத காங்கிரசில் இணைந்தார் அஜித் பவார். அந்த கூட்டணியிலும் அவருக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

கவிழ்ந்த ஆட்சி:

இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக மகா விகாஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், சிவசேனா கட்சியை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே கடந்த ஆண்டு தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் பிரிந்து சென்று பாஜக உடன் கூட்டணி அமைத்தார். மகாவிகாஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்ந்து அவர் முதலமைச்சர் ஆன நிலையில், தேவேந்திர பட்னாவிஸ் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

தேசியவாத காங்கிரசில் வெடித்த பிரச்னை:

இதனிடையே, கடந்த சில மாதங்களாகவே தேசியவாத காங்கிரஸில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே மற்றும் அஜித் பவார் இடையே அதிகார போட்டி நிலவி வந்தது. அதனை மேலும் அதிகப்படுத்தும் விதமாக, தேசியவாத காங்கிரசின் செயல் தலைவராக சுப்ரியா சுலேவை, சரத் பவார் அண்மையில் நியமித்தார். இதனால், அஜித் பவார் கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது.

மீண்டும் செய்த துரோகம்:

இந்த நிலையில் தான், அஜித் பவார் மீண்டும் தனது ஆதரவு எம். எல்.ஏக்கள் உடன் பாஜகவுடன் கூட்டணி வைத்து, துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதன் மூலம், கடந்த 5 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக அஜித் பவார் மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் தேசியவாத காங்கிரஸ் தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஒரு வார்த்தை கூட பேசாத ராகுல் காந்தி" கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திற்கு நிர்மலா சீதாராமன் கண்டனம்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Watch Video: குழந்தையாக மாறிய கோலி! கூடாரத்துக்குள் புகுந்து பந்தை எடுத்து அசத்தல் - வாவ்!
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Trichy: மத்திய மண்டலத்தில் நடப்பாண்டில் மட்டும் 1.45 லட்சம் சட்டவிரோத மது பறிமுதல்! பெரும் அதிர்ச்சி
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Breaking News LIVE: நீட் தேர்வு முறைகேடு! பீகாரில் 17 மாணவர்கள் தகுதி நீக்கம்
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
Anushka: அனுஷ்காவுக்கு இப்படி ஒரு பாதிப்பா? ஷூட்டிங்கே நின்றுவிடுமாம் - என்னங்க சொல்றீங்க!
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பெருத்த சவால்! 3 அடி உயரம் உள்ள பெண்ணுக்கு பிறந்த குழந்தை - சாதித்த அரசு மருத்துவர்கள்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
Embed widget