Accident: அகமதாபாத்: லிஃப்ட் அறுந்து விழுந்து விபத்து - 7 பேர் உயிரிழப்பு
லிஃப்ட் அறுந்து கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டட பணிகள் நடைபெற்று கொண்டிருந்த இடத்தில் லிஃப்ட் ஒன்று இயங்கி வந்துள்ளது. இன்று வழக்கம் போல் கட்டட பணியாளர்கள் பணியில் இருந்தப் போது அந்த லிஃப்ட் திடீரென்று அறுந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கும் நபர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Seven labourers dead in a lift collapse incident reported in Ahemdabad, Gujarat: Chief Fire Officer, Jayesh Khadia
— ANI (@ANI) September 14, 2022
இந்த விபத்து தொடர்பாக அகமதாபாத் தீயணைப்பு துறை அதிகாரி ஜெயஷ் காடியா, “அகமதாபாத் அருகே லிஃப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.