Ayodhya Temple: இனி இப்படித்தான் சொல்லனும்! அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் மாற்றம்...அர்த்தம் இதுதான்!
அயோத்தி ரயில் நிலையத்தை வரும் 30ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ள நிலையில், ரயில் நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
அயோத்தி ராமர் கோயில்:
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. 54,700 சதுர அடி பரப்பளவில் 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 16.5 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோயில் வளாகத்தில் அருங்காட்சியகம், உணவகம் உள்பட பல்வேறு வசதிகள் பக்தர்களுக்காக செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோவில் கட்டுமான பணிக்காக ரூ.1800 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் அமைக்கப்பட்டு வரும் ராமர் கோயிலில் 70 ஆயிரம் பேர் வரை ஒரு நேரத்தில் தரிசனம் மேற்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இச்சூழலில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 22-ஆம் தேதி அன்று ராமர் கோயில் திறப்பு விழா நடைபெறும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயில் திறப்பு விழாவின்போது, ராமர் கோயிலின் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி நிறுவ உள்ளார். இந்த பிரம்மாண்ட விழாவில் ஏராளமான அரசியல் தலைவர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள், மடாதிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
அயோத்தி ரயில் நிலையம்:
அயோத்தி கோயிலை தரிசனம் செய்ய நாடு முழுவதிலும் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனையொட்டி, போக்குவரத்து வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. சர்வதே தரத்தில் விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. இந்த ரயில் நிலையத்தை பிரதமர் மோடி டிசம்பர் 30ஆம் தேதி திறந்து வைக்கிறார். 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் இந்த ரயில் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ரயில் நிலையத்தில் 12 லிப்ட்கள், 14 எஸ்கலேட்டர்கள், உணவகங்கள், பயணிகள் ஓய்வறை என பல்வேறு வசதிகள் உள்ளன.
டிசம்பர் 30ஆம் தேதி அயோத்தி விமான நிலையம் திறக்கப்பட உள்ள நிலையில், ஜனவர 6ஆம் தேதி முதல் அயோத்திக்கு நேரடி விமான சேவை தொடங்க உள்ளது. டெல்லி, அகமதாபாத், மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் கோவா போன்ற முக்கிய நகரங்களுக்கு விமான சேவை வழங்கப்படுகிறது.
பெயர் மாற்றம்:
अयोध्या जंक्शन हुआ “अयोध्या धाम” जंक्शन
— Lallu Singh (@LalluSinghBJP) December 27, 2023
भारत के यशस्वी मा॰ प्रधानमंत्री श्री @narendramodi जी के मार्गदर्शन में नवनिर्मित भव्य अयोध्या रेलवे स्टेशन के अयोध्या जंक्शन का नाम, जनभावनाओं की अपेक्षा के अनुरूप, परिवर्तित कर #अयोध्या_धाम_जंक्शन कर दिया गया है..
1/2.. pic.twitter.com/WHKpAb5wmO
இந்த நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தின் பெயர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அயோத்தி ரயில் சந்திப்பு (Ayodhya Railway Station) என்று பெயர் இருந்த நிலையில், 'அயோத்தி தம்' (Ayodhya Dham) என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 'அயோத்தி தம்' என்பது ராமர் - சீதையின் இருப்பிடத்தை குறிக்கும் சொல் என்று கூறப்படுகிறது. தற்போது அயோத்தி ராமர் கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், அயோத்தி ரயில் நிலையத்தில் பெயர் ’அயோத்தி தம்' என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.