மேலும் அறிய

Agnipath LIVE: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது - பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்

Agnipath Scheme LIVE Updates: அக்னிபத் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் செய்தியாளர் சந்திப்பு..

Key Events
Agnipath Scheme LIVE Updates Tri-service press conference Agnipath agniveer recruitment scheme agneepath latest news in tamil Agnipath LIVE: அக்னிபத் திட்டத்தை வாபஸ் பெற முடியாது - பாதுகாப்பு அமைச்சகம் திட்டவட்டம்
அக்னிபத்

Background

புதிய அக்னிபாத் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டில் 3,000 'அக்னிவீரர்களை' கடற்படை சேர்க்கும் என மேற்கு கடற்படை தளபதி தெரிவித்துள்ளார். 

முன்னதாக, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் மூன்று படைத் தலைவர்கள் இணைந்து 'அக்னிபத்' இராணுவத் திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை அன்று வெளியிட்ட அறிக்கையில் ”இந்தத் திட்டத்தின் கீழ் ஆயுதப் படைகளில் நான்கு ஆண்டு சேவையை நிறைவு செய்யும் 'அக்னிவீரர்கள்' துணை ராணுவப் படைகள் மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.

அமித் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “அக்னிபத் யோஜனா இளைஞர்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு மற்றும் வரவேற்கத்தக்க முடிவு. இந்த நிலையில், இன்று, (மத்திய ஆயுதக் காவல் படைகள்) Central armed police force - CAPF  மற்றும் அசாம் ரைபிள்ஸ் ஆகியவற்றில் பணியமர்த்துவதற்கு இந்தத் திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகள் நிறைவு செய்யும் அக்னிவீரர்களுக்கு முன்னுரிமை அளிக்க உள்துறை அமைச்சகம் (Ministry of home affairs) முடிவு செய்துள்ளது

இந்த நடவடிக்கையானது ‘அக்னிபத்’ திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற இளைஞர்கள், தேசத்தின் சேவை மற்றும் பாதுகாப்புக்கு மேலும் பங்களிக்க உதவும்.

"இந்த முடிவைப் பற்றிய விரிவான திட்டமிடல் ஏற்கனவே தொடங்கிவிட்டது," என்று உள்துறை அமைச்சர் மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார்.

பெண்கள் உட்பட ராணுவ வீரர்களை நான்காண்டுகளுக்கு மட்டுமே பணியமர்த்தும் ‘அக்னிபத்’ திட்டம் கடந்த செவ்வாய் அன்று அறிவிக்கப்பட்டது, மற்றொரு சுற்று ஸ்கீரினிங்கிற்குப் பிறகு அவர்களில் 25 சதவிகிதம் பேரை மேலும் 15 ஆண்டுகளுக்கு வழக்கமான கேடரில் தக்கவைத்துக்கொள்ளலாம். ஆயுதப் படைகளின் செயல்பாட்டுத் தயார்நிலையை மேம்படுத்துதல் மற்றும் பிற துறைகளில் வேலைவாய்ப்பிற்காக திறமையான மற்றும் ஆற்றல்மிக்க பணியாளர்களை உருவாக்கும் நோக்கத்துடன் இது தொடங்கப்பட்டுள்ளது. ஆட்சேர்ப்பு செய்பவர்கள் 'அக்னிவீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள் மற்றும் அவர்களின் சீருடையின் ஒரு பகுதியாக ஒரு தனித்துவமான சின்னத்தையும் அணிவார்கள். என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

16:17 PM (IST)  •  21 Jun 2022

எந்த மாற்றமும் இல்லை - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்

நுழைவு-நிலை தகுதி, தேர்வு பாடத்திட்டம் அல்லது மருத்துவ தரநிலைகள் ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை. விமானப்படையில் அனைத்து சேர்க்கைகளும் அக்னிவீர் வாயு மூலம் மட்டுமே நடைபெறும் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்

15:46 PM (IST)  •  21 Jun 2022

ஒவ்வொரு சேர்க்கையும் இப்படித்தான்..

இந்திய விமானப் படையில் ஒவ்வொரு சேர்க்கையும் இனி 'அக்னிவீர் வாயு' மூலம் மட்டுமே நடைபெறும் - ஏர் மார்ஷல் சுராஜ் குமார்

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget