மேலும் அறிய

Agnipath Protest LIVE: அக்னிபத் போராட்டம் எதிரொலி... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை நிறுத்தம்..

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடைபெற்று வரும் போராட்டங்களை பற்றி உடனுக்குடன் ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் கீழே காணலாம்.

Key Events
Agnipath Protest LIVE Updates Agneepath scheme protest today Trains cancelled latest news Agnipath Protest LIVE: அக்னிபத் போராட்டம் எதிரொலி... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை நிறுத்தம்..
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள செகந்திரபாத் ரயில்நிலையம்

Background

 

இந்திய ராணுவத்திற்கு வீரர்களை சேர்ப்பதற்காக மத்திய அரசு கொண்டுவந்துள்ள அக்னிபத் என்ற புதிய திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இளைஞர்களும், மாணவர்களும் அக்னிபத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் பல பகுதிகளில் அக்னிபத் திட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

பீகாரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில், தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரத்தில் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இளைஞர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் செகந்திராபாத் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டதுடன் ரயில் நிலையத்திற்குள் புகுந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் ரயில்நிலையத்தில் உள்ள ரயில் தண்டவாளங்களை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டதால் ரயில்சேவை மூன்று மணிநேரம் பாதிக்கப்பட்டது. அவர்களை கட்டுப்படுத்த முயன்ற ரயில்வே போலீசார் மீது அவர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதுடன், அங்கிருந்த மூன்று ரயில்களையும் தீ வைத்து கொளுத்தினர். மேலும், அவர்கள் நடத்திய கல்வீச்சு தாக்குதலில் போலீசார் உள்பட பலரும் காயமடைந்தனர்.

காலை முதல் ரயில்நிலையத்திற்குள் புகுந்த போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு நபர் உயிரிழந்தார். இதுவரை சுமார் 15 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வன்முறைக் களமாக மாறியுள்ள செகந்திரபாத் ரயில்நிலையத்தில் கிழக்கு கடற்கரை எக்ஸ்பிரஸ், ராஜ்கோட் எக்ஸ்பிரஸ், அஜந்தா எக்ஸ்பிரஸ் ரயில்கள் போராட்டக்காரர்களினால் தீக்கிரையாகியது. இந்த போராட்டத்தினால் 71 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. பீகாரில் போராட்டக்காரர்கள் ரயில்களை கொளுத்தியதில் ஜம்மு தாவி எக்ஸ்பிரஸ் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பற்றி எரிந்தது. அக்னிபத் திட்டத்தால் முக்கிய நகரங்களில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

20:17 PM (IST)  •  17 Jun 2022

Agnipath Protest LIVE: அக்னிபத் போராட்டம் எதிரொலி... பீகார், ஹரியானாவில் இணையதள சேவை நிறுத்தம்..

பீகாரின் 12 மாவட்டங்களில் இன்று முதல் 19 ஆம் தேதி வரை அனைத்து இணையதள சேவைகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இதேபோல ஹரியானாவிலும் மாநிலத்தில் மகேந்தர்கர் பகுதியில் அடுத்த இருபத்தி நான்கு மணி நேரத்திற்கு மொபைல் இணைய சேவைகள் மற்றும் அனைத்து எஸ்எம்எஸ் சேவைகளையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. 

17:03 PM (IST)  •  17 Jun 2022

வடக்கு ரயில்வே கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களை ரத்து செய்தது தெற்கு ரயில்வே..!

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதால் தெற்கு ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்டு வடக்கு ரயில்வே கோட்டத்திற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
ஒரே இளைஞரைத் திருமணம் செய்துகொண்ட 3 சகோதரிகள்! வைரலாகும் விசித்திரச் சம்பவம்!
SC On CJP: மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
மாணவர்கள் மீது தாக்குதல்..! உச்சநீதிமன்றத்தில் நடந்த வாதம் - தலைமை நீதிபதியின் கருத்து என்ன?
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
போலீஸ் வாகனத்தை வழிமறித்த இளம்பெண் யார்? நாடு முழுவதும் பேசப்படும் ரியா அஹிரின் பின்னணி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!
ரயில்வேயில் புதிய புரட்சி: TTE-க்களுக்கு பாடி கேமரா - முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
வறண்டு வரும் அணைகள், ஏரிகள்! வறட்சியை சந்திக்கும் தமிழ்நாடு? உடனடி தீர்வு காண்பாரா விஜய்?
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
சிஎம் விஜய் கர்நாடகா செல்லக்கூடாது; மேகதாது அணை விவகாரத்தில் சதி- கொந்தளித்த அன்புமணி
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
கோயில்களில் கொடிமரம் அமைக்கனுமா? அறநிலையத்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு - என்னென்ன?
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
நீட் தேர்வை உடனே ரத்து செய்ங்க!- டெல்லி சம்பவத்தை சுட்டிக்காட்டி அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
Trump Tariff on India: போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
போட்டாருயா புது வரிய.! 17 நாடுகள் மீது வரிகளை விதித்த ட்ரம்ப்; இந்தியாவுக்கு எவ்வளவு தெரியுமா.?
Samsung Silicon-Carbon Battery: சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
சாம்சங் பிரியர்களுக்கு குட் நியூஸ்.! சிலிகான்-கார்பன் பேட்டரியுடன் வரும் கேலக்ஸி Z சீரிஸ்; என்ன சிறப்பு.?
iPhone 17 Price Hike: மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
மக்களே.! ஐபோன் 17 வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; ஆகஸ்ட்ல எக்கச்சக்கமா விலை ஏறப்போகுது.!
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
தேர்வு முறைகேடுகள்: நீட், நெட், டெட்...மத்திய அரசின் தொடர் குளறுபடி- தவிக்கும் மாணவர்கள்
Embed widget