ABP Southern Rising Summit 2024: பிரபலங்கள் பங்கேற்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - முழு பட்டியல் உள்ளே..!
ABP Southern Rising Summit 2024: ஐதராபாத்தில் நடைபெற உள்ள தெற்கின் குரலாக ஒலிக்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டை, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலாக ஒலிக்கும் ஏபிபி சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டில், பங்கேற்க உள்ள விருந்தினர்களின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஏபிபி நெட்வர்க் சதர்ன் ரைசிங் உச்சிமாநாடு 2024:
தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும் வகையில் ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு, முதன்முறையாக கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது. இதில் தற்போதைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட, பல்துறை பிரபலங்கள் பங்கேற்று தங்களது கருத்துகளை பகிர்ந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக, ஏபிபி நெட்வர்க்கின் நடப்பாண்டிற்கான சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு வரும் 25ம் தேதி ஐதராபாத்தில் நடைபெற உள்ளது.
உச்சி மாநாட்டை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்:
சதர்ன் ரைசிங் உச்சிமாநாட்டின் இரண்டாவது எடிஷன், "ஏஜ் கமிங்: அடையாளம், உத்வேகம், தாக்கம்" என்ற கருப்பொருளில் , தென் மாநிலங்களின் அரசியல், கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்களைக் கொண்டாட உள்ளது. கோலாகலமாக நடைபெற உள்ள இந்த மாநாட்டை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார். மேலும், புதிய தென்னிந்தியாவின் மாற்றத்தை உருவாக்குபவர்கள் மற்றும் தொலைநோக்குப் பார்வையாளர்கள் என பலர் பங்கேற்று தங்களது கருத்துகளை தெரிவிக்க உள்ளனர். அவர்களின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
விருந்தினர்கள் பட்டியல்
- ரேவந்த் ரெட்டி, முதலமைச்சர், தெலங்கானா
- அரவிந்த் சங்கா, ரேபிடோ இணை நிறுவனர்
- ஷில்பா ராவ், பாடகர்
- டாக்டர். விக்ரம் சம்பத், எழுத்தாளர் மற்றும் வரலாற்றாசிரியர் (FRHistS)
- யாமினி ரெட்டி, 3 முறை தேசிய விருது வென்ற கிளாசிகல் டான்சர்
- கவுரங் ஷா, ஃபேஷன் டிசைனர்
- ஜோத்ஸ்னா திருநகரி, தேசிய செய்தி தொடர்பாளர், தெலுங்கு தேசம் மற்றும் முன்னாள் தெலங்கானா தெலுங்கு மகிளரணி தலைவர்
- டாக்டர். ஷமா மொகமது, பல் மருத்துவர் மற்றும் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பாளர்
- டாக்டர் கனிமொழி என்விஎன் சோமு, மாநிலங்களவை உறுப்பினர், மாநில மருத்துவர் அணி தலைவர், திமுக செய்திதொடர்பாளர்
- கொம்பெல்லா மாதவி லதா, 2024ல் ஐதராபாத் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர்
- சிதம்பரம் எஸ்.பொடுவல், திரைப்பட இயக்குனர்
- கே.டி. ராமா ராவ், தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்
- பிந்து சுப்ரமணியம், பாடகர், SaPa நிறுவன தலைமை செயல் அதிகாரி & இணை நிறுவனர்
- கவுதமி தடிமல்லா, நடிகை & ஆடை வடிவமைப்பாளர்
- ராம் மோகன் நாயுடு கிஞ்சராபு, மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர், தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர்
- அனு ஆச்சார்யா, Mapmygenome நிறுவன தலைமை செயல் அதிகாரி
- ராஷி கண்ணா, நடிகை
- மனு எஸ்.பிள்ளை, வரலாற்றாசிரியர் மற்றும் எழுத்தாளர்
- மொகமது அலி பைக், பத்மஸ்ரீ விருது வென்ற நாடக, திரைப்பட நடிகர்
- மது கவுட் யாக்ஷி, பிரச்சாரக் குழுத் தலைவர், தெலங்கானா காங்கிரஸ்
- ரகுநந்தன் ராவ் மாதவனேனி, எம்.பி., மேடக் மற்றும் பாஜக மாநிலச் செயலர், தெலங்கானா
- புல்லேலா கோபிசந்த், பயிற்சியாளர், முன்னாள் ஆல் இங்கிலாந்து ஆண்கள் ஒற்றையர் சாம்பியன் மற்றும் பத்ம பூஷன் விருது பெற்றவர்
- சாய் துர்கா தேஜ், நடிகர்
- பிரகாஷ் ராஜ் நடிகர்