News Wrap - Abpநாடு | இன்றைய (16.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
News Wrap - Abpநாடு | இன்றைய (16.11.2021) முக்கிய செய்திகளின் தொகுப்பு..
தமிழ்நாடு:
1. ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி மாணவர்கள் போராடி வரும் நிலையில் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் என அனைத்து வகை தேர்வுகளும் நேரடியாக நடைபெறும் என உயர்கல்வித்துறை திட்டவட்டம்.
2. மதுரை எல்லீஸ் நகர், பெரியார் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பு கடைகளை 4 வாரத்தில் அகற்ற வேண்டும் என மதுரை மாநகராட்சி ஆணையருக்கு மதுரை உயர்நீதி மன்றக் கிளை உத்தரவு
3. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10 ஆம் தேதி விருச்சிக லக்கினத்தில் அண்ணாமலையார் சன்னதி எதிரே உள்ள 263 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் வேத மந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் தொடங்கியது.
4. வேலூர் மாவட்டத்தில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி உட்பட 5 பொறியியல் கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை இணையவழியில் நடத்த கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. மது போதையில் நிர்வணமாக அடுத்தவரின் வீட்டிற்குள் சென்ற நீலகிரி தொகுதி அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோபால கிருஷ்ணனின் கட்சி பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
1. தெலுங்கானாவில் அரசியலில் ஈடுபடுவதற்காக மாவட்ட ஆட்சியர் வெங்கட் ராம் ரெட்டி தனது பதவியை ராஜினாமா செய்து ஆளும் கட்சியான டி.ஆர்.எஸ்.கட்சியில் இணைய உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சினிமா:
1. நடிகர் விஜய் தேவரகொண்டா மைக் டைசனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உங்களுடன் இருந்த தருணத்தை நான் நினைவுகளாக உருவாக்கி வருகிறேன். அதிலும் இது பொக்கிஷமான தருணமாக மாறிவிட்டது என்று குறிப்பிட்டுள்ளார்.
விளையாட்டு:
1.இந்தியாவில் 2026 டி20 உலகக்கோப்பையும், 2029 சாம்பியன்ஸ் டிராபியும், 2031 உலகக்கோப்பையும் இந்தியாவில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2. சர்வதேச கிரிக்கெட் சங்கம் இந்த தொடரில் விளையாடிய சிறப்பு மிக வீரர்கள் அணியை அறிவித்தது. அதில், இந்திய அணியை சேர்ந்த ஒருவர் கூட இடம் பெறாமல் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், டி 20 போட்டி என்றால் அதிரடி ஆட்டத்திற்கு பெயர்போன வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த வீரர்களும் இந்த அணியில் இடம் பெறவில்லை.
உலகம்:
1. உலக பணக்கார நாடுகளின் வரிசையில் அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி சீனா தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.
குற்றம்:
1.கோவை சிங்காநல்லூர் அருகே 18 வயதான சுவாதி என்ற பெண் பிறந்தநாளில் தனது காதலுடன் பேச முடியவில்லை என்று தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2. கோவை பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்