பிரபல சீரியல் நடிகைக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லை.. சிக்கிய இளைஞர்
அந்த நபரின் பேஸ்புக் அக்கவுண்டை பிளாக் செய்துள்ளார். அவரோ இன்னொரு அக்கவுண்ட் மூலம் நடிகைக்கு கடந்த 3 மாதங்களாகவே தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார்.

பெங்களூருவில் பிரபல சீரியல் நடிகைக்கு ஆபாச படம் அனுப்பி தொல்லைக் கொடுத்த நபரை காவல்துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்த சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி எந்தளவுக்கு நம்முடைய முன்னேற்றத்திற்கு கைகொடுக்கிறதோ, அதைவிட ஒருபடி மேலாக தீய விஷயங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக அறிமுகம் இல்லாத நபர்களுக்கு ஆபாச மெசெஜ், படங்கள் அனுப்பி தொல்லை கொடுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் சின்னத்திரை வட்டாரத்தில் நடைபெற்றுள்ளது.
தொடர் ஆபாச படங்கள் மூலம் தொல்லை
கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பெயர் குறிப்பிடாத நடிகை ஒருவர் சீரியல்களில் நடித்து வருகிறார். இவருக்கு பேஸ்புக் மூலம் நவீன்ஸ் என்ற பேஸ்புக் கணக்கில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நட்பு அழைப்பு வந்துள்ளது. ஆனால் அந்த நடிகை அதனை ஏற்க மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து மெசெஞ்சர் செயலி மூலம் குறுஞ்செய்தி அனுப்ப தொடங்கியுள்ளார். ஆனால் ஆரம்பத்தில் அந்த நடிகை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.
ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக அந்த அக்கவுண்டில் இருந்து ஆபாச வீடியோ, மெசெஜ், படங்கள் என வர தொடங்கிய நிலையில் அதனைக் கண்டு அந்த நடிகை அதிர்ச்சியடைந்தார். அந்த நபரை கண்டித்துள்ளார். எனினும் அந்த நவீன்ஸ் அக்கவுண்டில் இருந்து தொடர்ச்சியாக அந்த நபரின் ஆபாச படங்கள், வீடியோக்கள் வந்து கொண்டிருந்தது.
பிளாக் செய்தும் தொடர் அலப்பறை
இதனால் அந்த நபரின் பேஸ்புக் அக்கவுண்டை பிளாக் செய்துள்ளார். அவரோ இன்னொரு அக்கவுண்ட் மூலம் நடிகைக்கு கடந்த 3 மாதங்களாகவே தொல்லை கொடுக்க தொடங்கியுள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த நடிகை சம்பந்தப்பட்ட நபரை சந்திக்க வேண்டும் என சொல்லி குறிப்பிட்ட இடத்திற்கு வர சொல்லியுள்ளார். அதன்படி கடந்த நவம்பர் 1ம் தேதி நகரபாவியில் உள்ள நந்தன் அரண்மனை அருகே இருவரும் சந்தித்து பேசியுள்ளனர்.
அப்போது அந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்டதால் கோபமடைந்த நடிகை உடனடியாக அவரை கடுமையாக கண்டித்துள்ளார். எப்படி சொல்லியும் அந்த நபர் கேட்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அந்த நடிகை உடனடியாக அன்னபூர்ணேஸ்வரி நகர் காவல்துறையில் இதுதொடர்பாக புகார் அளித்தார். அதன் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உடனடியாக விசார்ணை மேற்கொண்டனர்.
இதில் நடிகைக்கு தொல்லை கொடுத்தது பெங்களூருவைச் சேர்ந்த 41 வயதான நவீன் என்பது தெரிய வந்தது. இவர் தனியார் விற்பனை நிறுவனம் ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அவரை கைது செய்து 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.





















