Rampur Hospital Brawl: அதிக பணிச்சுமை, மன அழுத்தம்... டாக்டரை அறைந்த நர்ஸ் - அதிர்ச்சி வீடியோ

கொரோனா பணிச்சுமையால் டாக்டர், நர்ஸ் இருவரும் சண்டைப் போட்டுக் கொள்ளும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் தகாத வார்த்தையில் பேசிய டாக்டரின் கன்னத்தில் நர்ஸ் பளார் என்று அறை விட்டார். அதிக பணிச்சுமையால் இவர்கள் சண்டையிட்டு கொண்டதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருவதால் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என பல ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் இரவு, பகல் பாராமல் வேலை செய்து வருகின்றனர். சரியான தூக்கம், உணவு இன்றி அவர்கள் வேலை செய்து வருவதால் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். வடமாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ கட்டமைப்பு முறையாக இல்லாததால் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று பணிபுரியும் டாக்டருக்கும், நர்சுக்கும் இடையே பணியின்போது ஏற்பட்ட மோதலில் டாக்டர் நர்சை தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால், கோபமடைந்த நர்ஸ் டாக்டரின் கன்னத்தில் பளார் என்று அறைந்துவிட்டார். பதிலுக்கு நர்சை டாக்டரும் தாக்கினார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் தடுத்து சமாதானப்படுத்தினார். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது பதற்றம் ஏற்பட்டது.

#WATCH | A doctor and a nurse entered into a brawl at Rampur District Hospital yesterday.

City Magistrate Ramji Mishra says, "I have spoken to both of them. They say they were under stress and overburdened. We will probe this & speak to both of them."

(Note: Abusive language) pic.twitter.com/XJyoHv4yOh
— ANI UP (@ANINewsUP) April 27, 2021

டாக்டர், நர்ஸ் இருவரும் மன அழுத்தம் மற்றும் அதிக வேலை சுமையால் இவ்வாறு நடந்து கொண்டதாக கூறினர். இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் ராம்ஜி மிஸ்ரா கூறியுள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு டாக்டர் உள்பட சுகாதார பணியாளர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனால், அவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டு, இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது.

Tags: Corona Virus Doctor Uttar pradesh nurse Rampur District workload rampur district hospital rampur hospital fight in Rampur hospital

தொடர்புடைய செய்திகள்

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

''10 நிமிடங்களில் ரூ.16 கோடி உயர்ந்ததா அயோத்தியின் நிலம்? - பரபரப்பை உண்டாக்கிய குற்றச்சாட்டு!

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : தமிழ்நாட்டில் 13 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?

பீகாரில் அரசியல் சலசலப்பு.. லோக் ஜனசக்தி கட்சியில் சிக்கல்: சிராக் பஸ்வான் நீக்கமா?

India Corona Cases, 14 June 2021: 10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை எண்ணிக்கை

India Corona Cases, 14 June 2021:  10 லட்சத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா சிகிச்சை  எண்ணிக்கை

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

Morning News Wrap | காலை 8 மணி முக்கியத் தலைப்புச் செய்திகள்

டாப் நியூஸ்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Weather Update: தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? - முழு விவரம் தெரிவித்த வானிலை ஆய்வு மையம்

Rajinikanth Health Update: 14 சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

Rajinikanth Health Update: 14  சீட் தனி விமானம்.. மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா பறக்கும் ரஜினிகாந்த்?!

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

PUBG Madan | பப்ஜி மதனின் யூடியூப், இன்ஸ்டா பக்கங்களை முடக்க கடிதம்

Kishore K Swamy Arrested: முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது

Kishore K Swamy Arrested:  முதல்வர்கள் பற்றி அவதூறு; கிஷோர் கே சுவாமி கைது