Watch Video : ஓ.. இதுதான் அதுவா? ஆனியன் ரிங்ஸ் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. வைரலான வீடியோ..
டெல்லி நபர் ஒருவரின் சமீபத்திய ஆன்லைன் உணவு ஆர்டர் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. பலருக்கு சிரிப்பை வரவழைக்கும் இந்த விவகாரம் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது
டெல்லி நபர் ஒருவரின் சமீபத்திய ஆன்லைன் உணவு ஆர்டர் இணையத்தில் பெரிதும் பேசப்பட்டு வைரலாகி வருகிறது. பலருக்கு சிரிப்பை வரவழைக்கும் இந்த விவகாரம் உணவுப் பிரியர்களுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. ஒரு பொருளை ஆர்டர் செய்து வேறு ஒரு பொருளை டெலிவரி பெற்ற கதைகளை ஏராளமாக நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஐஃபோன் ஆர்டர் செய்து, சாக்லேட்களைப் பெற்றவர்கள், சருமத்திற்கான லோஷன் ஆர்டர் செய்து ஹெட்ஃபோன் பெற்றவர்கள் எனப் பலரும் நம்மைச் சுற்றி இருக்கும் சூழலில், டெல்லியில் இந்த நபர் மேற்கொண்ட ஆர்டரும் அதற்கான டெலிவரியும் நம்மை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
டெல்லியைச் சேர்ந்த உபைது என்பவர் ஆன்லைனில் ஆனியன் ரிங்க்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அவருக்கு வெங்காயம் ரிங் வடிவில் வட்டமாக வெட்டி அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் மூலம் பதிவிட்டு தனது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளார் உபைது. எனினும், இது பலரையும் சிரிக்க வைத்துள்ளதோடு, பலராலும் ஷேர் செய்யப்பட்டு, வைரலாகியுள்ளது.
இந்த வீடியோவில், `நான் ஆனியன் ரிங்க்ஸ் ஆர்டர் செய்திருந்தேன்.. எனக்கு இதுதான் கிடைத்தது’ என எழுத்துகள் காட்டப்படும் போது, உபைது சிரித்துக் கொண்டு ஒரு சிறிய கண்டெய்னரில் வெங்காயம் வட்டமாக வெட்டப்பட்டிருப்பதைக் காட்டுகிறார். இந்தப் பதிவின் கேப்ஷன் பகுதியில், `அழுவதை வெங்காயம் மூலமாக குறிப்பது இனி வெறும் உவமை மட்டுமல்ல’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
இந்த வீடியோவைப் பார்வையிட்ட பல நெட்டிசன்கள் தங்கள் கமெண்ட்களைக் கிண்டலாகப் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், தான் எந்த உணவகத்தில் ஆனியன் ரிங்க்ஸ் ஆர்டர் செய்தார் என்ற தகவலை உபைது வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்