ஐபோன் EMI பிரச்னை.. மலையில் இருந்து அப்பாவுடன் குதித்த இளைஞர்.. தாயும் தற்கொலை!
குணால் ஒரு ஐபோன் வாங்கிய நிலையில் அதற்கு மாதாந்திர தவணை செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் இஎம்ஐ கட்டணம் செலுத்துவது தொடர்பாக முரளிதர்க்கும், குணாலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்ட்ராவில் ஐபோன் இஎம்ஐ பிரச்னை காரணமாக ஒரு குடும்பமே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது.
மகாராஷ்ட்ராவின் வாலுஜ் எம்.ஐ.டி.சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திஸ்கான் பகுதியில் உள்ள காவ்டா மலையில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது. மகன் தற்கொலை மிரட்டல் விடுத்த நிலையில் அவனைக் காப்பாற்றச் சென்ற தந்தையும் எதிர்பாராதவிதமாக மலையில் இருந்து விழுந்து உயிரிழந்தனர். இதனைக் கண்ட அம்மாவும் மலையில் இருந்து குறித்து தற்கொலைச் செய்துக் கொண்டார்.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் முரளிதர் என்பவர் தனது மனைவி சங்கீதா மற்றும் மகன் குணாலும் வசித்து வந்தார். இதனிடையே குணால் ஒரு ஐபோன் வாங்கிய நிலையில் அதற்கு மாதாந்திர தவணை செலுத்தி வந்துள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் இஎம்ஐ கட்டணம் செலுத்துவது தொடர்பாக முரளிதர்க்கும், குணாலுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நேற்றைய தினம் காலை கோபமடைந்த குணால் காலை சுமார் 10 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி திஸ்கான் மலைக்குன்றுக்கு சென்றுள்ளார்.
மகனை சமாதானம் செய்ய பெற்றோரும் பின்னாடியே சென்றுள்ளனர். அங்கு மீண்டும் அப்பாவுக்கும், மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குணால் மலைக்குன்று மேல் ஏறி நின்று கீழே குதித்து விடுவதாக மிரட்டியுள்ளான்.
அவனை பெற்றோர் மட்டுமல்லாமல் அங்கிருந்த உள்ளூர் மக்களும் சமாதானம் செய்ய முயன்றனர். கிட்டதட்ட 3 மணி நேரத்துக்கும் மேலாக முயற்சி செய்தும் குணாலை சமாதானம் செய்ய முடியவில்லை. காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவலளிக்கப்பட்ட நிலையில் அவர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ஆனால் மலைக்குன்றின் கீழ் பகுதியில் அவர்கள் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
குணாலின் தந்தை தன் மகன் நின்றிருந்த இடத்திற்கு ஏறி சென்று அவனை பாறையின் விளிம்பில் இருந்து வலுக்கட்டாயமாக இழுக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக தந்தையும் மகனும் நிலைதடுமாறி கீழே இருந்த பள்ளத்தாக்கில் விழுந்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த சங்கீதாவும் மலையில் இருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பான நிகழ்வுகள் அனைத்து அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகள் பார்ப்பவர்களை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குணால் குதிப்பதாக மிரட்டிய போது, அங்கிருந்தவர்களில் ஒருவர் உன் தாய்க்காக அப்படி செய்யாதே என்றும், ஒன்னொருவர் நான் உனக்கு ஐபோன் 15 ப்ரோ வாங்கி தருகிறேன் என சொன்னார். இப்படி பலரும் வேண்டுகோள் விடுத்தும் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















