Suicide : அதிர்ச்சி.. மொபைல் பயன்படுத்தவேண்டாம்.. கண்டித்த பெற்றோர்.. 10 வயது சிறுவன் தற்கொலை
உத்தரப் பிரதேசத்தில் செல்போன் பயன்படுத்தவேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து, 10 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் செல்போன் பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் கண்டித்ததை தொடர்ந்து, 10 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுவன் பள்ளிக்கு செல்வதை நிறுத்திவிட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்தபடியே போனில் கேம் விளையாடுவது அந்தச் சிறுவனுக்கு வழக்கமாக இருந்து வந்துள்ளது. குடும்பத்தினர் அவரை பலமுறை தடுக்க முயன்றனர்.
எனினும், அந்தச் சிறுவன் கேட்காமல் போனில் தொடர்ந்து விளையாடுவதை வழக்கமாக்கி இருந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் நேற்று அந்தச் சிறுவனின் தாயார் போனை மகனிடம் இருந்து எடுத்துச் சென்றதும் மன உலைச்சலுக்கு ஆளான மகன், சகோதரியை ரூமிலிருந்து வெளியே அனுப்பி வைத்துவிட்டு தனிமையில் இருந்துள்ளான்.
வெகு நேரம் ஆன பிறகும் கதவைத் திறக்காததால் வீட்டில் கதவை உடைத்து ரூமை திறந்து பார்த்திருக்கிறார்கள். அப்போது, சிறுவன் தூக்கில் தொங்கியபடி இருந்திருக்கிறான் இவ்வாறு அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறை அதிகாரி கூறுகையில், "சிறுவனின் தாயார் எதுவும் கூறவில்லை. விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
இதனிடையே, ஒரு பெரிய திருப்புமுனையாக, டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு இமாசலப் பிரதேசத்தின் நலகர் என்ற இடத்தில் நீதிமன்ற துப்பாக்கிச் சூடு மற்றும் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விகாஸ் சவுத்ரி கொலையில் தொடர்புடைய ஒரு சிறார் மற்றும் நான்கு குற்றவாளிகளை கைது செய்துள்ளது.
இது மட்டுமின்றி, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த படுகொலை சம்பவத்திலும், உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் நடந்த இரட்டைக் கொலையிலும், ராஜஸ்தான் மாநிலம் நாகூரில் நீதிமன்றத்துக்கு வெளியே நடந்த பரபரப்பான கொலையிலும் குற்றவாளிகள் ஈடுபட்டனர்.
சிறுவனைத் தவிர மற்ற நான்கு குற்றவாளிகள் தீபக் குமார் (32), அனூப் தவா (26), ஜெய் பகவான் சிங் (37), மற்றும் அக்ஷய் பாலியன் (25) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆறு கைத்துப்பாக்கிகள், இரண்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் சுமார் 30 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டன.
காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம் சாட்டப்பட்ட தீபக் நாகௌர் நீதிமன்ற துப்பாக்கிச் சூட்டின் போது கொலைக்கு மூளையாக செயல்பட்டார், குற்றம் சாட்டப்பட்ட அக்ஷய் ஹரியானா, பஞ்சாப், உ.பி., மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பல கொலை வழக்குகள் மற்றும் மகாராஷ்டிராவின் புனேவில் தங்கக் கொள்ளை வழக்குகளில் தேடப்பட்டு வந்தார்.
போலீஸ் துணை கமிஷனர் (டிசிபி) நுண்ணறிவு பிரிவு, மனிஷி சந்திரா கூறுகையில், இன்ஸ்பெக்டர்கள் தலிப், விக்ரம் மற்றும் நிஷாந்த் தலைமையிலான சிறப்பு பிரிவு குழுவினர் மற்றும் உதவி கமிஷனர் மேற்பார்வையில் நடத்திய அதிரடி நடவடிக்கையின் போது மிகவும் குற்றவாளிகள் அனைவரும் பிடிபட்டனர் என்று போலீஸ் (ஏசிபி), ராகுல் விக்ரம் தெரிவித்தார்.