மேலும் அறிய

வீடுபுகுந்து குழந்தைகள் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்; 43 சவரன் நகைகள், 18 லட்சம் ரொக்கம் கொள்ளை - திண்டுக்கல்லில் துணிகரம்

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : திண்டுக்கல்லில் குழந்தைகள் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை, பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடு புகுந்து கொள்ளை:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் (40). இவர் ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய மனைவி கலையரசி (35). இந்த தம்பதிக்கு தனுஸ்ரீ என்ற 14 வயது மகளும், ராமச்சந்திரன் என்ற 7 வயது மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சீனிவாசன் வேலை விஷியமாக வெளியே சென்றுவிட்டார். வீட்டில் அவரது மனைவி மற்றும் குழந்தைகளை இருந்தனர்.  அப்போது முகமூடி அணிந்த 5 பேர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டின் வளாகத்திற்கு நுழைந்தனர். வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர்கள் குழந்தைகள் 2 பேரை பிடித்து கொண்டனர்.

பின்பு, அவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து வீட்டில் இருக்கும் நகை, பணத்தை எடுத்து தர வேண்டும் என கலையரசியை மிரட்டியுள்ளனர்.  அதற்கு அவர் வீட்டில் எதுவும் இல்லை என்று கூறினார். இதனால் சோதனை செய்த அவர்கள்,  பீரோவில் இருந்து நகை, பணத்தை எடுத்தனர்.  அதன்பிறகு கலையரசி அணிந்திருந்த நகையையும் மிரட்டி வாங்கினர். 43 சவரன்  நகை மற்றும் ரூ. 18 லட்சத்தை அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்து செல்போன்களையும் எடுத்து, வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.

போலீசார் விசாரணை:

பின்பு, சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த சீனிவாசன் பொருட்கள் எல்லாம் சிதறி கண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இந்த சம்பவம் குறித்து கலையரசி அவரது கணவரிடம் கூறினார்.  இந்த சம்பவம் தொடர்பாக சீனிவாசன் வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.  இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டை சோதனை செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர்.  மேலும் தப்பியோடிய மர்ம நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

ரியல் எஸ்டேம் வேலை செய்து வரும் சீனிவாசன், அப்பகுதியில் உள்ள  நிலத்தை வாங்க முடிவு செய்தார். இதற்காக கடந்த 19-ந் தேதி வங்கியில் இருந்து ரூ.18 லட்சத்தை எடுத்து வந்ததாக தெரிகிறது. ஆனால் அந்த நிலத்தை அவர் வாங்கவில்லை. இதனால் அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் தனது வீட்டிலேயே வைத்திருக்கிறார். எனவே அவருக்கு தெரிந்த நபர்கள் யாரேனும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது வடமாநில கொள்ளை கும்பலை சேர்ந்தவர்களா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.


மேலும் படிக்க

Pongal Gift: இன்று முதல் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வீடு, வீடாக விநியோகம்..! பரிசுத்தொகுப்பு பெறுவது எப்படி..?

Crime: கல்லூரி மாணவர்கள்தான் டார்கெட்; போதை மாத்திரை கும்பல் தலைவன் கைது - 17 ஆயிரம் மாத்திரைகள் பறிமுதல்..!

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget