மேலும் அறிய
Advertisement
10 PM Headlines: ஒரே நிமிடத்தில் உங்களைச் சுற்றி நடந்தவை..! 10 மணி தலைப்புச்செய்திகள்..!
Headlines 10 PM: காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- புதுக்கோட்டையை அடுத்த இலுப்பூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன
- அதிமுக பொதுச்செயலாளர் எனக் குறிப்பிட்டு, பழனிசாமிக்கு மத்திய சட்டத்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் எழுதப்பட்டுள்ளது.
- நீட், ஜே.இ.இ. உள்பட நுழைவுத் தேர்வுகள் குறித்த விவரங்களை மாணவர்களுக்கு தெரிவிக்க பள்ளிகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
- 2023 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
- பிரதமர் மோடியின் தாயார் விரைவில் குணமடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- தமிழ்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் கொரோன விதிமுறைகள் விலக்கி கொள்ளப்படவில்லை என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
- பொங்கல் தொகுப்புடன் கரும்பு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
- தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- அதிமுகவுடன் இணைய வாய்ப்பே இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
- ஒடிசாவில் நடைபெறும் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை நேரில் காண முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.
- துபாயிலிருந்து சென்னை வந்த 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா:
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் கடும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இதில் 4 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர்.
- ஆந்திராவில் நடைபெற்ற சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
- பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், உடனடியாக ஆட்சியை கலைக்க வேண்டும் எனவும் சிராக் பாஸ்வான் எம்.பி. கோரிக்கை விடுத்தார்.
- பிரதமர் மோடியின் தாயார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு சட்டத்தை பாஜக, ஆர்.எஸ்.எஸ் பலவீனப்படுத்துவதாக ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார்.
- சைப்ரஸ் குடியரசு மற்றும் ஆஸ்திரிய நாடுகளுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நாளை முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
- உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் மோடியின் தாயார் குணமடைய ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- கடந்த 2 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம்:
- இலங்கை கச்சத்தீவு திருவிழா மார்ச் 3 மற்றும் 4ம் தேதி கொண்டாடப்படும் என நெடுந்தீவு பங்குதந்தை அறிவித்துள்ளார்.
- உக்ரைன் கெர்சன் நகரின் மீது ரஷிய ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
- நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டன
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 63.50 கோடியாக உயர்வு
- சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.
விளையாட்டு:
- 2036ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கான ஏலத்தை கேட்க இந்தியா தயாராக உள்ளது என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
- உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷ்ப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த சவிதா ஸ்ரீ வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
- இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
- வங்கதேசத்திற்கு எதிரான வெற்றியின்மூலம் அஸ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர்.
- 2022ம் ஆண்டுக்கான வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் விருதுக்கு ஐசிசி 4 வீரர்களின் பெயரை பரிந்துரை செய்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
ஆன்மிகம்
தஞ்சாவூர்
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion