CoWin Registration | CoWin செயலியில் கொரோனா தடுப்பூசிக்கு 79 லட்சத்துக்கும் மேலானோர் முன்பதிவு..
CoWin செயலி மூலம் மட்டும் இன்று ஒரேநாளில் 79 லட்சத்து 65 ஆயிரத்து 720 நபர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து, கொரோனா தொற்றில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்வதற்கு, தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வருகிறது.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">There have been 79,65,720 registrations on Co-WIN today, most of these in the last three hours (16:00-19:00) and mostly of 18-44 age group. We have seen a traffic of 55,000 hits per second. System functioning as expected. <a href="https://t.co/AgLt3fMB7Z" rel='nofollow'>pic.twitter.com/AgLt3fMB7Z</a></p>— RS Sharma (@rssharma3) <a href="https://twitter.com/rssharma3/status/1387412652020752384?ref_src=twsrc%5Etfw" rel='nofollow'>April 28, 2021</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதற்காக, ஆரோக்கிய சேது மற்றும் கோ வின் செயலிகள் மூலமாக முன்பதிவு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதில் பதிவுசெய்யமுடியும். கோவின் செயலியில் 79 லட்சத்து 65 ஆயிரத்து 720 நபர்கள் பதிவு செய்துள்ளனர். பதிவு செய்தவர்களில் பெரும்பாலோனார் 18 வயது முதல் 44 வயதுக்குட்பட்டவர்களாவர். குறிப்பாக மாலை 6 மணிமுதல் இரவு 9 மணிவரை மட்டுமே பெரும்பாலோனார் பதிவு செய்துள்ளனர். இதை ஆயுஷ்மான் பாரத் அமைப்பின் சி.இ.ஓ. ஆர்.எஸ். சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.