மேலும் அறிய
7 AM Headlines: “மிரட்டிய மிக்ஜாம் புயல் முதல் மாஸ் காட்டிய வெஸ்ட் இண்டீஸ் அணி வரை” - காலை 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் இருந்து ஆந்திராவை நோக்கி நகர தொடங்கியது மிக்ஜாம் புயல் - 2 நாட்களுக்குப் பிறகு சூரியன் தலைக்காட்டியதால் மக்கள் மகிழ்ச்சி
- மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் இன்று பொதுவிடுமுறை அறிவிப்பு
- மிக்ஜாம் புயலால் பெய்த அதிகனமழையால் சின்னாபின்னமான சென்னை - நகரின் பல பகுதிகளிலும் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று புறநகர் ரயில் சேவை ரத்து - சென்னையில் இருந்து செல்லும் எக்ஸ்பிரஸ் சில எக்ஸ்பிரஸ் ரயில்களும் ரத்து
- மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னை, திருவள்ளுவர், அண்ணா பல்கலைக்கழகங்களில் நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
- மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக சென்னையில் இன்று ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு - வெள்ள பாதிப்பை பொறுத்து பேருந்துகள் இயக்கம் இருக்கும் என தகவல்
- சென்னையில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம் புகுந்ததாக நடிகர் விஷால் குற்றச்சாட்டு - அரசியல் செய்ய வேண்டாம் என மேயர் பிரியா ராஜன் பதிலடி
- சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பெய்த மழை நின்றதால் மக்கள் நிம்மதி - பல இடங்களில் வெள்ள நீர் வடிய தொடங்கியது
- சென்னை பல்வேறு இடங்களி மழைநீர் தேங்கியுள்ளதால் பால் விநியோகம் செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல்
- கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பு - செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்தது திறக்கப்படும் நீரின் அளவு 4 ஆயிரம் கன அடியாக குறைப்பு
- மிரட்டல் விட்ட மிக்ஜாம் புயல் - இயற்கையின் கோரதாண்டவத்தை ஓரணியாய் நின்று வெல்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு
- மிக்ஜாம் புயலால் பெய்த மழையில் திணறிப்போன வட மாவட்டங்கள் - நிவாரணப் பணிகளை மேற்கொள்ள 14 அமைச்சர்கள் நியமனம்
- மிக்ஜாம் புயலால் பெய்த மழை காரணமாக தேங்கிய வெள்ளம் - சென்னையில் விமான நிலையம் இன்று காலை 9 மணி வரை மூடல்
இந்தியா:
- நெல்லூருக்கு 30 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் - மசூலிப்பட்டினம் அருகே முற்பகலுக்குள் கரையை கடக்கும் என கணிப்பு
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடக்கம் - முதல் நாளில் 2 மசோதாக்கள் நிறைவேற்றம்
- 4 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் விசித்திரமாகவும், ஒருதலைப்பட்சமாகவும் இருப்பதாக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சாடல்
- மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 13 பேர் உயிரிழப்பு - போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம்
- மிசோரம் சட்டமன்ற தேர்தலில் சோரம் மக்கள் கட்சி அபார வெற்றி
உலகம்:
- இஸ்ரேலில் ஹமாஸ் அமைப்பினரால் கடத்தி செல்லப்பட்ட 6 தாய்லாந்து பணயக் கைதிகள் விடுவிப்பு
- இந்தோனேசியாவில் திடீரென வெடித்து சிதறிய எரிமலை - மலையேற்ற வீரர்கள் 11 பேர் உயிரிழப்பு
- உக்ரைன் முன்னாள் அதிபர் பெட்ரோ போரோஷென்கோ அந்நாட்டை விட்டு வெளியேற தடை விதிப்பு
- ஜாம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தொழிலாளர்கள் - மீட்பு பணிகள் தீவிரம்
விளையாட்டு:
- இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி - வெஸ்ட் இண்டீஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 98 ரன்கள் வாரி வழங்கி மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான சுட்டிக் குழந்தை சாம் கரன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
விளையாட்டு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion