மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: தூங்கி எழுந்ததும் என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இதோ 7 மணி ஹெட்லைன்ஸ்! செம ஹாட்டாக..!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கை அடைவோம்; முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது - காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- மணல் குவாரிகள் தொடர்பாக 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்களுக்கு தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது
- ‘தமிழகத்தை மீட்டெடுக்க பாஜகவால் மட்டுமே முடியும்’ - தஞ்சையில் அண்ணாமலை பேச்சு
- மருத்துவ காரணங்களுக்காக ஜாமின் வழங்க முடியாது என கூறி அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனுவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.
- கலைஞர் நூற்றாண்டு விழாவை மாற்றியமைக்க திரைப்படத்துறையினருக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.
- வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று மிக்ஜாம் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், தற்கொலைக்குக் காரணமாக இருந்ததாக மெக்கானிக்கல் துறை பேராசிரியர் ஆஷிஷ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியா:
- உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்பு ; 17 நாட்கள் போராட்டத்திற்கு பின் கிடைத்த வெற்றி
- கேரள சட்டப்பேரவை நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருந்த 8 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆரிப் கான் ஒப்புதல் அளித்துள்ளார்.
- உத்தரகண்ட் சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.
- சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மீட்புக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
- பொதுக்கூட்டங்களிலும், பேரணிகளிலும் கலந்து கொள்ளக்கூடாது என ஆந்திர உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையை உச்ச நீதிமன்றம் திரும்ப பெற்றுள்ளது.
- சாலை அமைத்து தர வேண்டும் என்று ஜம்மு காஷ்மீரில் 6 வயது சிறுமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
- காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்குமாறு தெலங்கானா மக்களுக்கு சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- சஞ்சய் சிங்கின் ஜாமீன் மனுவுக்கு வரும் டிசம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
உலகம்:
- காஸா பகுதியில் இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
- இஸ்ரேலுக்குச் சென்ற எலான் மஸ்க், அதிபர் ஜசக் ஹெர்சார்க மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்தித்து பேசி உள்ளார்.
- பப்புவா நியூ கினியாவில் வடக்கு கடற்கரையில் 6.5 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
- இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு காஸாவிற்கு வருகை தந்து, ராணுவ வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
விளையாட்டு:
- இந்தியாவிற்கு எதிரான 3வது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- பெண்கள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி: இந்திய - கனடா அணிகள் இன்று பலப்பரீட்சை
- அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு நமீபியா அணி தகுதிபெற்றது.
- டி 20 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் ருதுராஜ் கெய்க்வாட்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
மதுரை
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion