மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: பாடகி உமா ரமணன் காலமானார்.. 5 டிகிரி செல்சியஸ் வரை உயரும்.. இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- விருதுநகர் அருகே காரியாபட்டி கல்குவாரியில் நிகழ்ந்த வெடி விபத்தில் 3 பேர் உயிரிழப்பு.
- விருதுநகர் வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்த செய்தியறிந்து மிகுந்த வேதனையைடைந்தேன் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- கர்நாடகா கருத்தையே ஒழுங்காற்று குழு வழிமொழிந்து இருப்பது கண்டனத்துக்குரியது - வைகோ
- தமிழ்நாடு முன்னாள் டிஜிபி கருணா சாகர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
- குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற பீடித் தொழிலாளி மகள் ஸ்ரீமதிக்கு தமிழ்நாடு அரசு பாராட்டு.
- அதிகரிக்கும் கோடை வெப்பம் காரணமாக ஆவினில் மோர் பாட்டில் விற்பனை 30% உயர்வு.
- மன்னார்குடி: தொழிற்பேட்டை அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணி துவங்கியது - அமைச்சர் டிஆர்பி ராஜா.
- தமிழ்நாட்டில் இயல்பைவிட அதிகபட்ச வெப்பம் 5 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் - வானிலை ஆய்வு மையம்.
- தமிழ் திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் (72) சென்னையில் காலமானார்.
- ஆற்காடு மலைப்பாதையில் ஓட்டுனர் அதிவேகமாக பேருந்தை ஒட்டியதே விபத்துக்கு காரணம் - ஆர்.டி.ஓ.
- நீலகரி: முதுமலையில் பருவ மழைக்கு முந்திய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.
- சத்தியமங்கலம்: 2 கார்கள் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு.
- கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக உள்ள பேரிஜம் வனப்பகுதிக்கு செல்ல தற்காலிக தடை.
இந்தியா:
- பிரஜ்வால் ரேவண்ணா விவகாரத்தில் பிரதமர் மோடிக்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா கடிதம்.
- போலீசில் ஆஜராக 7 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என பிரஜ்வால் ரேவண்ணா கோரிக்கை.
- நடிகர் சல்மான் கான் வீட்டின் அருகே துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கில் கைதானவர் தற்கொலை.
- முன்னாள் முதலமைச்சர் பி.ஆர்.எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாள் பிரச்சாரம் செய்ய தடை.
- இந்தியாவில் 45 ஆண்டு இல்லாத அளவுக்கு வேலை இல்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது - பிரியங்கா காந்தி.
- ஏப்ரலில் இதுவரை இல்லாத சாதனை அளவாக ரூ. 2.10 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் - மத்திய அரசு.
- சின்னங்களை பதிவேற்றம் கருவிகளை பாதுகாத்து வைக்க வேண்டும் - தேர்தல் ஆணையம்.
- அபத்தமான, பொய்யான விஷயங்களை மோடி சொல்வதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
- சந்திரனின் துருவப்பகுதியில் பாதாளப்பள்ளங்களில் பெருமளவு நீர் உறைந்து பனியாக உள்ளது - இஸ்ரோ
உலகம்:
- இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் ஊதியம் ரூ.1,700 ஆக உயர்த்தப்படுகிறது - ரணில்
- காங்கேசன் துறைமுக வளர்ச்சிப்பணிக்கான மொத்த செலவையும் ஏற்க இந்திய அரசு ஒப்புதல்.
- சீனா குவாங்டாங் மாகாணத்திலுள்ள நெடுஞ்சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் சிக்கி 19 பேர் உயிரிழப்பு.
- பிரேசிலில் கடந்த 4 மாதங்களில் இதுவரை 40 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு.
- ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின்மீது இஸ்ரேல் படையெடுக்கும் - பெஞ்சமின்
- கம்போடியா ராணுவ தளத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்.
- நியூயார்க் காஸா போரை நிறுத்த வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் கைது.
விளையாட்டு:
- ரஷித் கான் தலைமையில் டி20 உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட ஆப்கானிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் 2024: சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- இன்றைய ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion