மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: சென்னை விபத்தில் 9 பேர் பலி; சீனா செல்லும் ரஷ்ய அதிபர்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே லாரி மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழப்பு.
- நாமக்கல்: முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.65 ஆக நிர்ணயம்.
- திருத்தணியில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் தவிப்பு.
- தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோமீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை மையம்
- மஞ்சள் காய்ச்சல் பரவி வரும் நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முழுவதும் நாளுக்குநாள் அதிகரிக்கும் வெப்பநிலை; காலை 10 மணி முதல் மாலை 4 வரை கட்டிட வேலை செய்யக்கூடாது - தமிழ்நாடு அரசு உத்தரவு
- வருமானத்துக்கு அதிகமாக ரூ. 1.79 கோடி சொத்து; சுகாதாரத்துறை அதிகாரி பழனி வீட்டி அதிரடி சோதனை
- தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம்; 3 நாட்களில் சவரன் ரூ. 649 குறைந்தது
- கணக்கு பணிகள் பதவிக்கு விண்ணப்பித்தவர்கள் முழுமையான சான்றிதழை பதிவேற்றம் செய்ய இறுதி வாய்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
- பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; கோவை மாவட்டம் முதலிடம்
- குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் ஜாமீன் நிபந்தனை மீறப்படுகிறதா என விசாரணை அதிகாரிகள் கண்டிப்பாக கண்காணிக்க வேண்டும் - தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை
இந்தியா:
- வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே உயர்ந்து சென்ற பங்குச்சந்தை குறீயிட்டு எண்கள் 0.45 சதவீத உயர்வுடன் நிறைவு.
- 7 விமான நிலையங்களை அதானிக்கு தாரைவார்க்க எத்தனை டெம்போக்களில் பணம் பெற்றீர்கள் என ராகுல் காந்தி கேள்வி.
- ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவாலை தாக்கியவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவு - சஞ்சய் சிங்.
- வைகாசி மாத பூஜைக்காக சபரிமலை ஜயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
- வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் பிரதமர் மோடி மீதான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - தேர்தல் ஆணையம்.
- திருப்பதி: வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அருகே தெலுங்குதேசம் - ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் மோதல்.
- 2024 ஜனவரி - மார்ச் காலாண்டில் ரூ.2072 கோடி நிகர லாபம் ஈட்டி உள்ளதாக அறிவித்துள்ளது
- பார்த்தி ஏர்டெல் நிறுவனம். டெல்லி வருமானவரித்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு.
- வாராணாசி தொகுதி வேட்பாளரான பிரதமர் மோடியின் சொத்து மதிப்பு ரூ. 3.02 கோடி என பிரமாணப் பத்திரத்தில் தகவல்.
உலகம்:
- 5வது முறையாக பதிவுயேற்ற பிறகு ரஷ்ய பிரதமர் புதின் சீனா செல்கிறார்.
- காசாவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஐ.நாவில் பணியாற்றி வந்த இந்தியர் கொல்லப்பட்டார்.
- ஆப்கானிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு.
- பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு - 3 பேர் உயிரிழப்பு.
- தெற்கு ஆஸ்திரேலியாவில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை.
விளையாட்டு:
- ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இன்று மோதல்.
- உலக டேபிள் டென்னிஸ் தரவரிசை: 24வது இடத்துக்கு முன்னேறினார் இந்திய வீராங்கனை மணிகா பத்ரா.
- ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றிபெற்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion