மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்று அட்சயதிரிதியை நாள்.. சென்னையுடன் மோதும் குஜராத்..இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு, புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு - காலை 9.30 மணிக்கு வெளியாகும் என அறிவிப்பு
- 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு மே 13 முதல் சிறப்பு வகுப்புகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
- அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்வு - வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.90 உயர்வு
- சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு - குடியரசுதலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்
- பட்டாசு ஆலைகள் விபத்து தொடர்பாக உயர்மட்டகுழு அமைத்து விசாரணை நடத்த அரசியல் கட்சியினர் வலியுறுத்தல்
- தமிழ்நாட்டின் முதல் பாஜக எம்.எல்.ஏ., வேலாயுதன் மறைவு - முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்
- கோவை நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து சிறையில் உள்ள சவுக்கு சங்கர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி
- 126வது மலர் கண்காட்சி - நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
- தமிழகத்தில் 12 இடங்களில் சதமடித்த வெயில் - சில இடங்களில் கோடை மழை பெய்ததால் மக்கள் நிம்மதி
- நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில் - கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவுறுத்தல்
- தமிழகத்தில் 23 வகை வெளிநாட்டு நாய்களுக்கு தடை விதிப்பு
- வாகனங்களில் ஸ்டிக்கர் - மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
- யூட்யூப் சேனல்கள் கட்டுப்பாடுகள் இல்லாமல் ஒழுங்கற்று செயல்பட இதுவே நேரம் - சென்னை உயர்நீதிமன்றம்
- தமிழ்நாடு முழுவதும் தொழிற்பயிற்சி நிறுவனங்களில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
- திடீரென 100 அடிக்கு உள்வாங்கிய திருச்செந்தூர் கடல் - ஆபத்தை உணராமல் குளித்த பக்தர்களை எச்சரித்த போலீஸ்
- சென்னையில் நாய் கடித்து படுகாயமடைந்த சிறுமிக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்தது - நலமுடன் இருப்பதாக தகவல்
இந்தியா:
- ஜனநாயகத்தை பலவீனப்படுத்தி பாஜக பலம் பெற நினைப்பதாக பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
- 2 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் வாபஸ் பெற்றனர்
- மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது அறிவிப்பு - குடியரசு தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் பெற்றுக்கொண்டார்.
- கேதர்நாத் யாத்திரை இன்று தொடங்கும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
- ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் என ராகுல் காந்தி ஆரூடம்
- மும்பையில் வெளிநாட்டு பயணி கடத்தி வந்த ரூ.15 கோடி மதிப்பிலான போதை பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள்
- பணத்தை கொடுத்து வாங்குவதாக பாஜக மீது மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி கடும் தாக்கு
- காங்கிரஸ் கட்சிக்கு அதானி, அம்பானி பணம் கொடுத்ததாக பிரதமர் மோடி குற்றச்சாட்டு - அவர்கள் வீட்டுக்கு அமலாக்கத்துறையை அனுப்புமாறு ராகுல் பதிலடி
உலகம்:
- தைவானில் இருந்து கலிபோர்னியா சென்ற விமானத்தில் இருக்கைக்காக அடித்துக் கொண்ட பயணிகள்
- 2024 ஆம் ஆண்டுக்கான இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என அறிவிப்பு
- பாகிஸ்தானின் குவாடர் துறைமுகத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 தொழிலாளர்கள் உயிரிழப்பு
- இந்திய உள்விவகாரங்களில் தலையிட அமெரிக்கா முயற்சி செய்ததாக ரஷ்யா குற்றச்சாட்டு
- இந்தியா உட்பட 7 நாடுகளின் சுற்றுலா பயணிகளுக்கு இலவச சுற்றுலா விசாக்கள் வழங்கப்படும் என இலங்கை அரசு மீண்டும் அறிவிப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: 60 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி
- ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதல்
- பாகிஸ்தான் - அயர்லாந்து இடையேயான டி20 தொடர் இன்று தொடக்கம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion