மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் தொடங்கி உலகம் வரை.. உங்களைச் சுற்றி நடப்பது என்ன? தலைப்புச் செய்திகள் இதோ!
7 AM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் குறித்து இங்கு காணலாம்.
தமிழ்நாடு:
- பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வருகை: கன்னியாகுமரியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பங்கேற்பு
- நாடு முழுவதும் பெட்ரோல் விலையில் ரூபாய் 2 இரண்டு குறைப்பு; சென்னையில் பெட்ரோல் ரூபாய் 100.75க்கு விற்பனை
- சென்னையில் வெள்ளம் வந்தபோது மக்களுக்கு ஆறுதல் சொல்ல வராத பிரதமர், தேர்தலில் வாக்கு கேட்க மட்டும் வருவது ஏன் என தமிழ்நாடு முதலமைச்சர் கேள்வி
- சென்னை அருகே லேசான நில நடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 3.9ஆக பதிவு
- முதலமைச்சர் பரிந்துரைக் கடிதம் இருப்பதால் பொன்முடியை அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் ஆளுநருக்கு எந்தவிதமான சிக்கலும் இருக்காது என சபாநாயகர் அப்பாவு தெரிவிப்பு
- கீழே விழுந்து காயம்பட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குணமடைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
- ஜாபர் சாதிக்கிற்கும் தி.மு.க.வுக்கும் எந்த தொடர்பும் இல்லை; திமுக மீதும் முதலமைச்சர் மீதும் களங்கம் விளைவிக்க எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை முயல்வதாக அவர்கள் மீது அவதூறு வழக்கு தொடுப்பு - ஆர்.எஸ்.பாரதி
- தமிழை கற்பிக்க மறுக்கும் பள்ளிகளுக்கு தி.மு.க. அரசு துணைபோகிறது என சீமான் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டிற்கு தந்த திட்டங்கள் குறித்து பிரதமரை பேச சொல்லுங்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சவால்
- செங்கல்பட்டில் ரூ.15 கோடி மதிப்பில் புதிய விளையாட்டு வளாகம் - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- பிரதமர் மோடி கன்னியாகுமரி வரும் போது கருப்புக்கொடி காட்டி காங்கிரஸ் எதிர்ப்பு - செல்வப்பெருந்தகை
- கரும்பு விவசாயி சின்னம் விவகாரம்: சீமான் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
இந்தியா:
- இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக இன்று தமிழ்நாடு வருகின்றார் பிரதமர் மோடி; கன்னியாகுமரியில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பு
- தேர்தல் பத்திர விவரங்களை இணையத்தில் வெளியிட்டது இந்திய தேர்தல் ஆணையம்
- கேரளாவை சேர்ந்த ஞானேஷ்குமார், பஞ்சாபை சேர்ந்த சுக்பீர் சந்து ஆகியோர் தேர்தல் ஆணையர்களாக நியமனம்
- நாடாளுமன்ற தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி
- ஒரே நாடு ஒரே தேர்தல்- ஜனாதிபதியிடம் 18 ஆயிரத்து 626 பக்க அறிக்கையை தாக்கல் செய்தது ராம்நாத் கோவிந்த் குழு
- குடியுரிமை திருத்த சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை - அமித்ஷா
- ஆபாச காட்சிகளை ஒளிபரப்பிவந்த 18 ஓடிடி தளங்களுக்கு தடை விதித்தது மத்திய அரசு
உலகம்:
- ஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்; டோக்கியோவில் இருந்து 208 கி.மீ. தொலைவில் நிலநடுக்கத்தின் மையம் அமைந்திருந்ததாக அறிவிப்பு
- அமெரிக்கா: நீர் ஸ்கூட்டர் விபத்தில் சிக்கி இந்திய மாணவர் பலி
- இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- நிவாரணப் பொருட்கள் வாங்க திரண்ட மக்கள் மீது இஸ்ரேல் படை துப்பாக்கி சூடு: 6 பேர் பலி என தகவல்
- அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது
விளையாட்டு
- மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறப்போவது யார்? நடப்புச் சாம்பியன் மும்பையுடன் பெங்களூரு இன்று பலப்பரீட்சை
- விதர்பா அணியை 169 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 42வது முறையாக ரஞ்சிக் கோப்பையை வென்றது மும்பை
- சூப்பர் டிவிசன் ஆக்கி: ஸ்டேட் வங்கி, தமிழ்நாடு போலீஸ் அணிகள் வெற்றி
- ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதியதில் தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion