மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை! கடந்த 24 மணி நேரத்தின் முக்கிய நிகழ்கள் - 7 மணி தலைப்புச் செய்திகளாக இதோ!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம் - புதுப்பானையில் பொங்கலிட்டு மக்கள் உற்சாகம்
- போகி பண்டிகையை முன்னிட்டு பழைய பொருட்கள் எரிக்கப்பட்டதால் சென்னையில் மோசமாக மாறிய காற்றின் தரம்
- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் வாழ்த்து
- புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று நடைபெறுகிறது - 1000 காளைகள், 800 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு
- தமிழ்நாடு அரசியலை சுத்தப்படுத்தும் வரை பாஜக ஓயாது என மாநில தலைவர் அண்ணாமலை பேச்சு
- தமிழ்நாடு முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் ஒரு வாரத்தில் மூடப்படும் என அமைச்சர் துரை முருகன் உறுதி
- பொங்கல் பண்டிகையை கொண்டாட இதுவரை 6 லட்சம் மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் - வெறிச்சோடியது சென்னை
- அயோத்தி ராமர் கோயில் திறப்பு ஒரு அரசியல் விழா - திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கடும் விமர்சனம்
- மணலி, எண்ணூர் பகுதி மக்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த புதிய திட்டங்கள் உருவாக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு
- இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக்கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
- போகி பண்டிகைக்கு கடந்த காலங்களை விட மாசின் அளவு குறைந்துள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
- தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கையே தொடரும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேச்சுக்கு தமிழ்நாடு அரசு பதிலடி
- தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை விலகியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
- அரசு பள்ளிக்கு நிலத்தை தானமாக அளித்த ஆயி என்ற பூரணம் அம்மாளுக்கு குடியரசு தின விழாவில் முதலமைச்சர் சிறப்பு விருது அறிவிப்பு
இந்தியா
- டெல்லியில் நிலவும் கடுமையான குளிர் - பள்ளிகள் இன்று முதல் மீண்டும் திறப்பு
- டெல்லியில் காற்று தர குறியீடு கடும் மோசம் - கட்டுமானம் மற்றும் கார்களுக்கு தடை
- ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளா மாநிலங்களுக்கு பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் செய்யவுள்ளதாக அறிவிப்பு
- டெல்லியில் கடும் குளிருக்கு நெருப்பு மூட்டியதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 6 பேர் உயிரிழப்பு
- மணிப்பூரில் மீண்டும் அமைதி, மத நல்லிணக்கத்தை கொண்டு வருவோம் - மீண்டும் யாத்திரை தொடங்கிய ராகுல்காந்தி பேச்சு
- ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்கு 55 நாடுகளை சேர்ந்த 100 தலைவர்களுக்கு அழைப்பு
உலகம்
- இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள மராபி எரிமலை 2வது முறையாக வெடிப்பு - மக்கள் அச்சம்
- 100வது நாளை எட்டிய பாலஸ்தீனம் - இஸ்ரேல் போர் - தங்களை தடுக்க முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு திட்டவட்டம்
- மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களை திரும்ப அழைக்குமாறு இந்தியாவுக்கு கெடு விதிப்பு
- சீனப்பெருஞ்சுவரில் உலகின் மிகப்பெரிய ஓவியம் வரைந்து பெண் ஓவியர் சாதனை
விளையாட்டு
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2வது டி20 போட்டி இந்திய அணி வெற்றி - 3 போட்டிகள் கொண்ட தொடரை கைப்பற்றியது
- ப்ரோ கபடி லீக் தொடரில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி அரியானா ஸ்டீலர்ஸ் அணி வெற்றி
- ஆஸ்திரேலிய வீரர் ஷான் மார்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
- ஒலிம்பிக் பெண்கள் ஹாக்கி தகுதிச்சுற்று போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியது இந்திய அணி
- ப்ரோ கபடி லீக் தொடரில் பாட்னா பைரட்ஸ் - தபாங் டெல்லி இடையேயான ஆட்டம் டிரா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கிரிக்கெட்
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion