மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இதுவரை நடந்தது, இன்று என்ன நடக்கிறது? இதெல்லாம் உங்களுக்காக தலைப்பு செய்திகளாய்!
7 AM Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடந்த நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- சென்னையில் இன்று முதல் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ. 1,968க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
- வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவருக்கு நிபந்தனை ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
- சாத்தனூர் அணையில் இருந்து உபரி நீர் திறப்பு - 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
- சென்னையில் கனமழை பாதித்த பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
- வருகின்ற 4ம் தேதி புயல் உருவாகிறது, 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- அதிமுக பெயர், சின்னம், கொடி விவகாரம்; ஓபிஎஸுக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க மறுப்பு - உயர்நீதிமன்றம் உத்தரவு
- மழைநீரை அகற்ற இரவு, பகலாக உழைக்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பாராட்டு
- தி.நகர், மேற்கு மாம்பலத்தின் மழைநீரில் மின்சாரம் பாய்ந்து 2 பேர் உயிரிழப்பு
- செம்மண் வெட்டி எடுக்க டெண்டர் விவகாரம்: அமைச்சர் பொன்முடியிடம் 5 மணிநேரம் விசாரணை - அமலாக்கத்துறையிடம் ஆவணங்களை வழங்கினார்.
- இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்தியா:
- தெலங்கானா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் 3 மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ், மிசோரமில் இழுபறி - வெளியான கருத்து கணிப்பு முடிவுகள்
- ரூ. 2.23 லட்சம் கோடியில் போர் விமானம் ஹெலிகாப்டர்கள் தயாரிப்பு - மத்திய அரசு ஒப்புதல்
- 119 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல், தெலங்கானாவில் 63.94% வாக்குப்பதிவு - நடிகர், நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
- நாட்டின் எழுச்சியை தீர்மானிக்கும் நான்கு ஜாதிக்காரர்கள் எனக்காக இருக்கின்றனர் - பிரதமர் மோடி பேச்சு
- தெலங்கானா தேர்தலில் மக்கள் பி.ஆர்.எஸ் கட்சிக்கு ஆதரவளிப்பார்கள் என்றும் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றும் எம்.எல்.சி கவிதா தெரிவித்துள்ளார்.
- சீனாவில் நிமோனியா காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்கள் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளன.
- உலக காலநிலை மாற்ற உச்சி மாநாடு: துபாய் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
- நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்: நாளை நடக்கிறது அனைத்துக்கட்சி கூட்டம்
உலகம்:
- 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடனுக்கு வாக்களிக்கமாட்டேன் - எலான் மஸ்க்.
- ஜெருசலேமில் பஸ் நிறுத்தத்தில் திடீர் துப்பாக்கிச்சூடு; 6 பேர் காயம்.
- இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நீட்டிப்பு
- சிறந்த கிரகத்தை உருவாக்கும் நோக்கில் நடைபெறும் உச்சிமாநாட்டின் நடவடிக்கைகளை எதிர்நோக்குகிறோம் - பிரதமர் மோடி
விளையாட்டு:
- ரவீந்திர ஜடேஜா மீது பொறாமை இருப்பதாகவும் ஆனால் அவர் இல்லை என்றால் தான் இல்லை என்றும் இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் கூறியுள்ளார்.
- தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய அணி வீரர்களின் விவரத்தை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
- இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான விராட் கோலி ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் விளையாட வேண்டாம் என திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- முதல் முறையாக உலகக் கோப்பை டி20க்கு தகுதிபெற்றது உகாண்டா அணி; வாய்ப்பை இழந்தது ஜிம்பாப்வே
- இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
ஜோதிடம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion