மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: நேற்றைய நாள் எப்படி..? ஒரே நிமிடத்தில் அறிய.. இதோ காலை 7 மணி தலைப்பு செய்திகள்!
Headlines 7 AM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- சிறப்பு திட்ட செயலாக்க துறை சார்பில் வெளியிடப்படும் அறிவிப்புகள் கடைக்கோடி மக்களையும் சென்றடைய உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவு
- அறநிலையத்துறை கோயில்களில் ரூ.56.18 கோடியில் புதிய கட்டுமான பணிகள்: முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டதை தொடர்ந்து வெண்ணெய் விலையும் உயர்வு: ஆவின் நிர்வாகம் அறிவிப்பு
- தமிழர்களின் வாழ்வோடு ஒன்றியது ஜல்லிக்கட்டு போட்டி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
- குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிப்பதால் தமிழகத்தில் 20, 21 ம் தேதிகளில் கனமழை பெய்யும் : வானிலை மையம் தகவல்
- திருவண்ணாமலை மலைமீது 11 நாள் மகாதீபம் நிறைவு: மலையில் இருந்து கொப்பரை கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது
- சசிகலாவால் என் உயிருக்கு ஆபத்து: ஜெ.தீபாவின் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு
- 5 வயதிற்கு மேல் 18 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்கான வீர தீர விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- காஞ்சிபுரத்தில் டெங்குவிற்கு ஒன்றரை வயது குழந்தை உயிரிழப்பு
- 25,000 ஏக்கர் வேளாண் விளைநிலங்களை, என்எல்சி பறிப்பதை கைவிட வலியுறுத்தி ஜனவரி 7, 8 தேதிகளில் நடை பயணம் மேற்கொள்ள பா.ம.க அறிக்கை வெளியிட்டுள்ளது.
- மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்யும் வகையில் வரும் 21ம் தேதி முதல் கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப்பட உள்ளது.
இந்தியா:
- குஜராத் கலவர வழக்கு: பில்கிஸ் பானு சீராய்வு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி
- தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிரொலி; ஆன்லைன் விளையாட்டுக்கு அங்கீகாரம் தள்ளிவைப்பு - ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பின்வாங்கியது மத்திய அரசு
- ஆன்லைன் டெலிவரி நிறுவனமான ஸ்விகியில் பெங்களூரைச் சேர்ந்த ஒருவர் 16 லட்சத்திற்கு மளிகைப் பொருட்கள் வாங்கியுள்ளதாக ஸ்விகி நிறுவனம் தெரிவித்துள்ளது.
- பல்கலைக்கழங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கவேண்டி கேரள சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் 18-ம் படி வழியாக நிமிடத்திற்கு 80 பக்தர்கள் செல்ல ஏற்பாடு
- பிரான்ஸின் டஸ்ஸால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்ட ரஃபேல் போர் விமானத்தின் 36வது போர்விமானம் நேற்று இந்தியா வந்து சேர்ந்தது.
- முந்தைய பட்ஜெட்களின் தொடர்ச்சியாகவே அடுத்த நிதியாண்டிற்கான, பட்ஜெட் அமையும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- சீனாவில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஐநா சிறப்பு தூதர் பதவியில் இருந்து ஏஞ்சலினா ஜோலி திடீர் விலகல்.
- சீனாவில் புதிதாக 2,286 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி.
- சிறுகோளின் 10 லட்சம் கிலோ பாறைகள், தூசுகள் விண்ணில் வெளியேற்றம் - நாசா அமைப்பு
- பருவநிலை மாற்றம் எதிரொலியால் 30 நாடுகளில் காலரா பரவல் - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
விளையாட்டு:
- ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி: மகுடம் சூடப்போவது யார்? அர்ஜெண்டினா - பிரான்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை.
- உலகக் கோப்பை கால்பந்து: மொராக்கோவை வீழ்த்தி 3ம் இடம் பிடித்த குரோஷியா அணி.
- புரோ கபடி: புனே அணியை வீழ்த்தி 2வது முறையாக சாம்பினம் பட்டம் வென்றது ஜெய்ப்பூர்.
- பார்வையற்றோருக்கான டி20 உலகக்கோப்பை: 3வது முறையாக வென்ற இந்திய அணி.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : 4-ம் நாள் முடிவில் வங்காளதேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்ப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
திரை விமர்சனம்
பொழுதுபோக்கு
கோவை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion