மேலும் அறிய

India Corona Spike: இந்தியாவில் 40,000-ஐ கடந்த கொரோனா எண்ணிக்கை.. 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்த தினசரி பாதிப்பு

இந்தியாவில் புதிதாக 7,830 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 40,000-ஐ கடந்து பதிவாகியுள்ளது.

இந்தியாவில் நேற்று 38,000 ஆக இருந்த தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்துள்ளது. கடந்த 6 மாதங்களில் ஏப்ரல் 9-ஆம் தேதி தினசரி தொற்று பாதிப்பு 6000-ஐ கடந்தது ஆனால் அதனை தொடர்ந்து தினசரி தொற்று பாதிப்பு குறைவாக பதிவானது. கடந்த 24 மணிநேரத்தில்  7,830 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் xbb 1.16 வகை கொரோனா வேகமாக பரவி வருகிறது. இந்த மாறுபட்ட வைரஸால் உயிர் பறிக்கும் ஆபத்து இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புவர்களில் சதவீதம் 98.72 சதவீதமாக உள்ளது. இறப்பி விகிதம் 1.19 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக 40,215 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 14,506 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4875 பேர், டெல்லியில் 2876 பேர், ஹரியானாவில் – 2149 பேர், குஜராத்தில் 1947 பேர், தமிழ்நாட்டில் 2301 பேர்- என மொத்தம் 40,215 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதை ஒட்டி கடந்த வாரம் மத்திய சுகாதார துறை அமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் அனைத்து மாநிலங்களிலும் ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் கொரோனா ஒத்திகை நிகழ்ச்சி நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி 28,050 அரசு மருத்துவமனை மற்றும் 5,635 தனியார் மருத்துவமனை என மொத்தம் 33,685 மருத்துவமனைகளில் ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரிகள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட/சிவில் மருத்துவமனைகள், CHCகள் மற்றும் HWCகள் மற்றும் PHCகள், தனியார் மருத்துவமனைகள்,  தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் சுகாதார மையங்களில் இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

 ஆக்ஸிஜன் படுக்கைகள், தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், வென்டிலேட்டர்கள், பிஎஸ்ஏ ஆலைகள்,  ஆக்ஸிஜன் செறிவூட்டிகள், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருந்துகள் மற்றும் பிபிஇ கருவிகள் உள்ளிட்ட முக்கியமான மருத்துவ உள்கட்டமைப்பு மதிப்பீடு செய்யப்பட்டது.  உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68  கோடியே 50 லட்சத்து 13 ஆயிரத்து 517 ஆக அதிகரித்துள்ளது. அதில் 2 கோடியே 3 லட்சத்து 41 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 68 கோடி பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 65 கோடி 78 லட்சத்து 335 ஆயிரத்து 558 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 68 லட்சத்து 38 ஆயிரத்து 548 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Milli Bobby Brown: காதலரை கரம் பிடிக்க இருக்கும் ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் நாயகி..உச்சகட்ட அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget