மேலும் அறிய
Advertisement
6 PM Headlines: இன்றைய தலைப்புச் செய்திகள் - இதுவரை நடந்தது இதுதான்..!
6 PM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஆங்கில புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம் - நள்ளிரவில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
- புத்தாண்டு கொண்டாட்டம் - சென்னை மெரினா கடற்கரையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் மக்கள் கொண்டாட்டம்
- புத்தாண்டு கொண்டாட புதுச்சேரி கடற்கரையில் கூடிய பொதுமக்கள் - கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறல்
- புதுச்சேரியில் புத்தாண்டு கொண்டாட வந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த வாலிபர் கடலில் ராட்சத அலையில் சிக்கி உயிரிழந்தார்.
- தமிழக அரசின் செய்தி தொடர்புத்துறை நிறுவனமான TNDIPR ட்விட்டர் பக்கம் ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. நேற்று இரவு 1.30 மணி அளவில் இந்த ட்விட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
- பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் உள்ளிட்ட 2007ஆம் ஆண்டில் தகுதி பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
-
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல் அகவிலைப்படி 34 சதவிகிதத்தில் இருந்து 38 சதவிகிதம் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது டெல்லியில் திடீர் நில அதிர்வு - பொதுமக்கள் அதிர்ச்சி
-
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
- விபத்திலிருந்து மீண்ட மறு நிமிடமே ரிஷப் பந்த் தனது தாயாரை போனில் அழைக்குமாறு கோரிக்கை விடுத்ததாகக் கூறியுள்ளார்.
-
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் இந்திய அரசுத் துறைகள் மீதான சைபர் அட்டாக் 95 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது.
-
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் இடம்பெற்ற உலக வரைபடம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
-
மனைவியின் சொத்தினை அவரின் அனுமதியின்றி கணவரே கூட எடுக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
உலகம்:
-
உகாண்டாவில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
- ஜப்பானைச் சேர்ந்த ஒருவர் நிஜ நரிப்போல மாற வேண்டும் என்பதற்காக ஆடை வடிவமைப்பு நிறுவனத்தினை அணுகி பல லட்சங்கள் செலவழித்து நரியைப் போன்ற ஆடையை வாங்கியுள்ளார்.
- சிரியா எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் - 12 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்
- உலக நாடுகளில் வாண வேடிக்கைகளுடன் உற்சாகமாக கொண்டாடப்பட்ட புத்தாண்டு கொண்டாட்டம் - வீதிகளில் ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாட்டம்
விளையாட்டு:
- இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்கள் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிடுள்ளது.
- உலகக்கோப்பையை வென்ற பின்னர், புத்தாண்டையொட்டி மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்துடன் புகைப்படத்தை வெளியிட்டு, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
- ஸ்பெயினில் நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது, அங்கிருந்த குழந்தைகளுக்காக ரசிர்கர்கள் பொம்மைகளை பரிசாக அளித்துள்ளது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் கவத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion