மேலும் அறிய

'அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!

மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஒரு நாள் நாம் அனைவருமே ஒரே முகவரி கொண்டவர்களாக இருப்போம். பூமி என்ற ஒற்றை வார்த்தை தான் அந்த விலாசம்

59 ஆண்டுகளுக்கு முன்னதாக கோபாலகிருஷ்ணன் ஒரு மசூதியைக் கட்டினார். அந்த மசூதி கட்ட மூலதனமாக கிறிஸ்தவர் ஒருவர் கொடுத்த ரூ.5000 பயன்பட்டது. அன்று எதேச்சையாக அமைந்த மத நல்லிண்ணக்கம் தான் பின்னாளில் மானவமித்ரி என்ற மத நல்லிணக்கம் பேணும் அமைப்பை கோபாக கிருஷ்ணன் உருவாக்க அடித்தளமாக அமைந்தது.

111 மசூதிகள், 4 தேவாலயங்கள், ஒரு கோயில்.. 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் பாளையம் பேக்கரி ஜங்ஷனை ஒட்டிதான் கோபாலகிருஷ்ணனின் வீடு இருக்கிறது. வீடும், அலுவலகமும் அதுவாகவே இருக்கிறது. வரவேற்பரையை அலங்கரிக்க ஒரு பைபிள், ஒரு பகவத் கீதை, ஒரு குரான் வைக்கப்பட்டுள்ளது.

தனது கதையை புன்னைகையுடன் தொடங்கிய கோபாலகிருஷ்ணன் குழந்தைப் பருவம் தொட்டு நினைவலைகளை விவரிக்கலானார். 

"எனது குழந்தைப்பருவத்தில் கட்டிடங்கள், பெரிய நினைவுச் சின்னங்கள் எனது கவனத்தை ஈர்ப்பதாக அமைந்தது. எனது தந்தை ஒரு கட்டிட ஒப்பந்ததாரர். அவர் மூலமாகவே எனக்கு கட்டிடக் கலை மீதான ஆர்வம் மிகுந்தது. இன்று 111 மசூதிகள், 4 தேவாலயங்கள் மற்றும் ஒரு கோயிலைக் கட்டியதற்கும் அதுவே காரணம்.

மதவழிபாட்டுத் தலங்கள் எனக்கு சகோதரத்துவத்தை உணர்த்திக் கொண்டே இருந்தது. 1962 ஆம் ஆண்டு எனது குடும்பத்துக்கு மசூதி கட்டும் வாய்ப்பு வந்தது. அதற்கு எதேச்சையாக மூலதனமாக கிறிஸ்தவ நண்பர் கொடுத்த நிதி உதவியாக அமைந்தது. அதுதான், 2002ல் நான் மானவமித்ரி என்ற தொண்டு நிறுவனத்தை அமைக்க வழிவகுத்தது.

அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!

பாளையம் ஜும்மா மசூதி

அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!

பீமபள்ளி மசூதி

அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!

1962ல் அப்பாவுக்கு பாளையம் ஜும்மா மசூதியை மறுகட்டமைப்பு செய்யும் பணி தேடி வந்தது. அந்தப் பணிக்கு குட்டியம்மும் சாஹிப் தலைமை பொறியாளராக இருந்தார். அந்த மசூதிக்கான கட்டுமான வரைபடத்தை ஜே.சி.அலக்சாண்டர் வரைந்தார். மசூதி கட்டுவதற்கான ஒப்பந்தத்தை என் தந்தை கோவிந்தன் பெற்றார். ஆனால், மூலதனத்துக்கு குறைவான நிதியே அப்பாவிடம் இருந்தது. அப்போது சுமார் என்ற நண்பர் ஒருவர் ரூ.5000 கொடுத்தார். அவர் ஒரு கிறிஸ்தவர். மத நல்லிணக்கத்தோடு தொடங்கப்பட்ட அந்த கட்டுமாணப் பணி 5 ஆண்டுகளில் நிறைவு பெற்றது. அந்த மசூதியை குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் திறந்துவைத்தார்.

அந்த வேலையை முடித்த கையோடு பீமபள்ளி தர்கா ஷரீஃப் மசூதியை சீரமைக்கும் பணி கிடைத்தது. அப்போது எனக்கு 31 வயது தான். அந்த ப்ராஜக்டை நான் தான் எடுத்துச் செய்யவேண்டிய வாய்ப்பு வந்தது. அப்போது வீட்டில் மின் வசதி இல்லை. அந்த மசூதிக்கான கட்டுமான திட்டத்தை நான் இரவு பகல் பாராது உருவாக்கினேன். இந்தோ பாரசீக முறையில் அதை உருவாக்கினேன். அதுவரை கேரளாவில் அந்த பாணியில் மசூதி கட்டப்படவில்லை. பெர்சி பிரவுனின் Indian Architecture (Islamic Period) என்ற புத்தகத்திலிருந்து கட்டுமானத்துகான வழிகாட்டுதல்களைப் பெற்றேன். அந்த மசூதியின் பணியை முழுமையாக முடிக்க 17 ஆண்டுகள் ஆகின. இடைப்பட்ட காலத்தில் வீடுகள், இன்னும் பல சிறிய மசூதிகளை கட்டினேன். சபரிமலை கோயில் செல்லும் வழியில் எருமேலியில் உள்ள வாவர் மசூதியைக் கட்டியதும் நான் தான்.
அப்போது தான் புனித ஜார்ஜ் தேவாலயத்தை பத்தனம்திட்டாவில் கட்ட வாய்ப்புவந்தது. 

அன்பு.. அதானே எல்லாம்’ : இந்து கட்டிய மசூதி, உதவி செய்த கிறிஸ்தவர் - கோபாலகிருஷ்ணன் கதை!

ஞான் கண்ட குரான் முதல் தொகுதி

கடந்த 40 ஆண்டுகளில் நான் கட்டிய ஒரே ஒரு கோயில் என் வீட்டின் அருகே உள்ள பத்திரகாளி கோயில் தான். 
எல்லா மதமும் ஒன்று தான். மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே. ஒரு நாள் நாம் அனைவருமே ஒரே முகவரி கொண்டவர்களாக இருப்போம். பூமி என்ற ஒற்றை வார்த்தை தான் அந்த விலாசம்" என்று தத்துவார்த்தமாக தனது எண்ணம் பற்றி கூறினார்.

தனது பயணம் குறித்து ஞான் கண்ட குரான் Njan Kanda Quran (The Quran I saw) – Volume 1" என்ற புத்தகத்தில் அவர் எழுதியிருக்கிறார்.

Source: The news minute.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
ABP Premium

வீடியோ

Rahul gandhi meeting | ”எல்லாரும் டெல்லி வாங்க”ராகுலுடன் முக்கிய மீட்டிங்!படையெடுத்த தமிழக காங்கிரஸ்
Alanganallur Jallikattu TVK flag | ஜல்லிக்கட்டில் தவெக கொடி! ”பரிசு கிடையாது வெளிய போ” கண்டித்த கமிட்டி
Soori vs Vijay | ”தவெகவை மீறி படம் ஓடுமா” வம்பிழுத்த நெட்டிசன்! சூரி தரமான பதிலடி!
ESCAPE ஆன விழா குழுவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman:
Seeman: "நீதான் கெஞ்சனும்.. சேட்டைக்காரன் நான்.." சீமான் ஏன் ஆவேசப்பட்டார்?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
அஜித்துடன் மோதும் விஜய்.. மங்காத்தாவுடன் மல்லுகட்டும் தெறி..! தேர்தல் நேரத்தில் தேவையா?
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
DMK Congress: திமுக-விடம் அதிக சீட் கேட்பது ஏன்? காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் விளக்கம் இதுதான்!
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
Crime news: காதல் வலை.. ரகசிய வீடியோ.. 13 லட்சம் பறிப்பு! தெலுங்கானாவை அதிரவைத்த ஹனிட்ராப் தம்பதி
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஏடிஎம்-ல் பணம் எடுப்பதில் மாற்றம்: இனி எவ்வளவு கட்டணம்?
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் !! திருமணம் செய்த மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்
Seeman Vs EPS: “ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
“ஆண்களுக்கு இலவச பேருந்து யார் கேட்டா.?; இபிஎஸ்-ன் தேர்தல் வாக்குறுதிகளை வறுத்தெடுத்த சீமான்
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
மும்பையில் அமோக வெற்றி: பாஜகவின் எழுச்சிக்கு பிறகு ராஜ் தாக்கரேவின் ரசமலாய் கிண்டலுக்கு அண்ணாமலை பதில்!
Embed widget