Emergency 1975: 48 ஆண்டுகளாகியும் மறக்க முடியாத துயரம்.. எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட தினம் இன்று..!
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய மக்களால் என்றைக்கும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாகும். அன்றைய தினம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் நாட்டில் அவரச நிலை அமல்படுத்தப்பட்டது.
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி இந்திய மக்களால் என்றைக்கும் மறக்க முடியாத ஒரு கருப்பு நாளாகும். அன்றைய தினம் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி உத்தரவின் பேரில் நாட்டில் அவரச நிலை (emergency) அமல்படுத்தப்பட்டது.
எமர்ஜென்சி உருவான வரலாறு
1971 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு இந்திரா காந்தி வெற்றி பெற்றார். அவரால் தோற்கடிக்கப்பட்ட ராஜ் நரேன் என்பவர் தேர்தல் மோசடி வழக்கு ஒன்றை தொடர்கிறார். 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், இந்திரா காந்தியின் வெற்றி செல்லாது எனவும், அடுத்த ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இந்திராகாந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஜூன் 24 ஆம் தேதி உறுதி செய்தது. ஆனால் அவர் பிரதமராக தொடரலாம் என தெரிவித்திருந்தது.
காரணம் என்ன?
இந்த இடைப்பட்ட காலத்தில் நாடுதழுவிய அளவில் இந்திரா காந்திக்கு எதிராக தொழிற்சங்கங்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தது. இதுவே இந்திராகாந்தி அவசர நிலை பிரகடனத்தை அமல்படுத்த முக்கிய காரணமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து ஜூன் 25 ஆம் தேதி அன்றைய குடியரசு தலைவர் ஃபக்ருதினுடன் ஆலோசனை நடத்தினார். அடுத்த ஒருமணி நேரத்தில் நாட்டில் அவசர நிலை அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
நாடு முழுவதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆல் இந்தியா ரேடியோவிலும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதில் இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் சிறை தண்டனை அனுபவித்தார்.
இந்திய வரலாற்றின் இருண்ட காலம்
1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி முதல் 1977 ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி வரை கிட்டதட்ட 21 மாதங்கள் அவரசநிலை அமலில் இருந்தது. இதன் பிறகு தனக்கு ஆதரவாக பெருகிவரும் எதிர்ப்பு அலைகளைப் பார்த்து, இந்திராகாந்தி மக்களவையைக் கலைத்துவிட்டு புதிதாகத் தேர்தலை நடத்த பரிந்துரைத்தார். இந்த முடிவு அவரது கட்சிக்கும் அவருக்கும் எதிராக மாறியது. இந்திராவும் அந்த தேர்தலில் தோல்வியை தழுவினார். காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழந்தது. நாடு சுதந்திரம் பெற்ற பின்னர் அக்கட்சி சந்தித்த முதல் படுதோல்வி இதுவாகும்.
இந்திரா காந்தி அவசரநிலையை பிறப்பித்த நாளான ஜூன் 25 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநில பாஜகவினர் மாநிலம் தழுவிய அளவில் கருப்பு தினமாக கடைபிடிக்கின்றனர்.48 ஆண்டுகள் ஆனாலும் அந்த துயரம் இன்னும் அன்றைய காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள் மனதில் பசுமரத்தாணி போல பதிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.