2 ஆண்டுகளில் 47 புதிய தேசிய நீர்வழிகள்.. ஹேப்பி நியூஸ் சொன்ன மத்திய அமைச்சர் சோனாவால்
2 ஆண்டுகளில் 76 நீர்வழிப் போக்குவரத்து வழிகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.

2027 ஆம் ஆண்டுக்குள் 47 புதிய தேசிய நீர்வழிகள் செயல்பாட்டுக்கு வரும் என்றும் 2026 ஆம் ஆண்டுக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக உயரும் என்றும் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார்.
மும்பையில் நேற்று நடைபெற்ற உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்கு மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் தலைமை தாங்கினார்.
2 ஆண்டுகளில் 47 புதிய தேசிய நீர்வழிகள்:
அப்போது பேசிய அவர், 2027 ஆம் ஆண்டுக்குள் 76 நீர்வழிப் போக்குவரத்துகளை இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 2026 நிதியாண்டின் இறுதிக்குள் சரக்கு அளவு ஆண்டுக்கு 156 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து விரிவாக பேசிய மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால், “இந்தியாவின் சரக்குப் போக்குவரத்து சூழலியலில் உள்நாட்டு நீர்வழிகள் ஒரு முக்கிய அங்கமாக உருவாகி வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ், தேசிய நீர்வழிச் சட்டம், 2016, உள்நாட்டு கப்பல்கள் சட்டம், 2021 போன்ற கொள்கை தலையீடுகள் மற்றும் ஜல் மார்க் விகாஸ் திட்டம், அர்த்த கங்கா, ஜல்வஹாக் திட்டம், ஜல் சம்ரிதி திட்டம், ஜல்யான் மற்றும் நேவிக் போன்ற பல திட்டங்களால் கூடுதலாக ஒரு மாற்றத்தை நாம் காண்கிறோம்.
மத்திய அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்:
இந்த செயல்திட்டங்கள் வெறும் கொள்கை ஆவணங்கள் அல்ல. அவை இந்தியாவை உலகளாவிய கடல்சார் சக்தியாக மாற்றுவதற்கான ஊக்கிகளாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான இன்றைய சந்திப்பு, உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நமது ஆறுகள் மற்றும் கடற்கரைகளின் மகத்தான பொருளாதார ஆற்றலை வெளிக்கொணர்வதற்கும் ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட பட்ஜெட் ஆதரவு மற்றும் கூட்டுறவு கூட்டாட்சியுடன், நாடு முழுவதும் பசுமையான, திறமையான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள நீர்வழி வலையமைப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம்”, என்று கூறினார்.
முக்கிய திட்டங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் குறித்து கப்பல் போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.
ஒடிசா, ஜம்மு காஷ்மீர், கோவா, கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா மற்றும் தமிழ்நாடு போன்ற பிற மாநிலங்களுடன் NW -1 (கங்கை நதி), NW 2 (பிரம்மபுத்ரா) ஆகியவற்றில் நடைபெற்று வரும் பணிகளை குழு ஆய்வு செய்தது.





















