43 பெண் கைதிகள் பாதிப்பு.. பஞ்சாப் சிறைச்சாலையிலும் பரவியது கொரோனா தொற்று..
உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் சிறைச்சாலையில் பத்து பேர், ஜம்மு காஷ்மீர் சிறைச்சாலையில் 540 பேர் என கொரோனா பாதிப்பு சிறைச்சாலைகளிலும் பரவிவருவதை அடுத்து இன்று பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சிறைச்சாலையில் பெண்கள் 43 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துவருகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 56,211 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை 2279 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஒருபக்கம் மத்திய அரசு மக்களைத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளச் சொல்லி வலியுறுத்தி வருகிறது. மற்றொரு பக்கம் எந்த நேரமும் ஊரடங்கு அறிவிக்கப்படலாம் என்கிற அச்சம் மக்களிடையே உருவாகியுள்ளது.
Punjab | 43 women prisoners & a child have tested positive for COVID. They've been transferred to another location. A team from Dist Admin is conducting testing in the jail premises. Jail employees and officers being vaccinated: Jail Superintendent, Patiala's New Nabha jail pic.twitter.com/jiDA5fkhxV
— ANI (@ANI) March 30, 2021
இந்த நிலையில் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா சிறையை சேர்ந்த 43 பெண் கைதிகள் மற்றும் 1 குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதிசெய்யப்பட்ட நோயாளிகள் தற்போது வேறு சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்புதான் உத்தரப்பிரதேசத்தின் கான்பூர் சிறையைச் சேர்ந்த 10 நோயாளிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
இரண்டு நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் சிறைச்சாலையில் உள்ள கைதிகள் 540 பேருக்கு கொரோனா உறுதியானது. சிறைச்சாலைகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நோய் பாதிப்புக்கான பரிசோதனையும் மாநிலவாரியாக முடுக்கிவிடப்பட்டுள்ளது.