Crime: தலைநகரில் பயங்கரம்! நடுரோட்டில் இளம்பெண்ணை பலமுறை கத்தியால் குத்திய இளைஞர்!
டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் பாலியல் வன்முறை குற்றங்களை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனையும் விதிக்கப்பட்டு வருகிறது.
கேலி செய்த பெண்:
இருப்பினும் கூட, ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. குறிப்பாக டெல்லியில் நடக்கும் வன்முறை சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. இந்த நிலையில், டெல்லியில் நடுரோட்டில் இளம்பெண் கத்தியால் பலமுறை குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி முகர்ஜி நகரில் பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்திய நபரை போலீசார் கைது செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டவர் முகர்ஜி பகுதியைச் சேர்ந்த அமன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் சமையல்காரராக பணிபுரிந்து வருகிறார்.
இளம்பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்:
இத்ந நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னை பைத்தியம் என்று கூறி கேலி செய்தததாகவும், இதனால், ஆத்திரத்தில் பெண்ணை கத்தியால் நான்கு அல்லது ஐந்து முறை குத்தியுள்ளதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அந்த பெண், 22 வயதான இளைஞர் அமனை கேலி செய்து வந்ததாக தெரிகிறது.
இதனால், ஆத்திரத்தில் அருகில் இருந்து காய்கரி வியாபாரியன் கத்தியை எடுத்து பலமுறை குத்தியுள்ளார். அப்போது, அவ்வழியாக சென்ற நபர் ஒருவர், அந்த இளைஞரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்தார். இதனை அடுத்து, காயம் அடைந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
பகீர் வீடியோ:
#WATCH | Delhi: A 22-year-old man Aman has been arrested for attacking a girl in the Mukherjee Nagar area with a knife in broad daylight. The incident occurred on 22 March.
— ANI (@ANI) March 24, 2024
The passers-by intervened and tried to stop and catch the accused. The girl did not suffer grievous… pic.twitter.com/y5M4U4girT
அந்த வீடியோவில், ஓடிச் செல்லும் பெண்ணை, இளைஞர் கத்தியால் குத்துகிறார். அந்த பெண் தடுக்க முயன்றும், தொடர்ந்து அந்த பெண்ணை கத்தியால் குத்துகிறார். மேலும், பெண்ணை கீழே தள்ளிவிட்டு, கத்தியால் தாக்குகிறார். அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் குற்றம் சாட்டப்பட்டவரை தடுத்து பிடிக்க முயன்றிருக்கிறார். அப்போதும், அந்த பெண்ணை குத்திவிட்டு தப்பிச் செல்வது போன்று வீடியோவில் உள்ளது.