சாக்குப்பையில் இளைஞர் உடல்! தொடரும் கொலைகள்...சட்டக்கல்லூரி மாணவருக்கு நேர்ந்த கொடூரம்...
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 21 வயது சட்டக்கல்லூரி மாணவர் கொல்லப்பட்டு, அவரது உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்ட சம்பமவ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் 21 வயது சட்டக்கல்லூரி மாணவர் கொல்லப்பட்டு, அவரது உடல் சாக்கு பையில் அடைக்கப்பட்டு வாய்க்காலில் வீசிப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை போலீசார் உறுதி செய்து உள்ளனர்.
#RaviVisvesvarayaSharadaPrasad https://t.co/nJsW36iEIb 21-Year-Old Killed, Body Thrown In Drain In UP's Meerut; 3 Arrested
— Ravi Visvesvaraya Sharada Prasad, Telecom InfoTech (@rvp) July 3, 2022
மேலும், இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஜூன் 27 முதல் காணாமல் போன மாணவர் யாஷ் ரஸ்தோகி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதை படிக்க மிஸ் பண்ண வேண்டாமே: Kamal Haasan: 170 சதுரஅடி நிலம்.. கமலுக்கு நோட்டீஸ் அனுப்பிய மெட்ரோ நிர்வாகம்!
இதுகுறித்து காவல்துறை அலுவலர் கூறுகையில், "250க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை சோதனை செய்ததில் அவர் தனியாக சென்றது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அவர் ஸ்கூட்டியில் சென்றுள்ளார். சிறிது நேரம் கழித்து சிசிடிவியில் அவர் தென்படவில்லை.
இதை படிக்கவும்: குவியும் புகார்கள்...19 லட்சத்திற்கும் அதிகமான கணக்குகள் முடக்கம்...வாட்ஸ்அப் அதிரடி
விசாரணையில், அப்பகுதியைச் சேர்ந்த 3 பேர் அவரைக் கொன்று, அவரது உடலை சாக்கு பையில் அடைத்து வாய்க்காலில் வீசியது தெரியவந்தது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சட்டக்கல்லூரி மாணவர் எப்படி கொல்லப்பட்டார் என்று கேட்டதற்கு, உடற்கூறாய்வு அறிக்கைக்காக காத்து கொண்டு இருப்பதாக காவல்துறை அலுவலர் ஒருவர் கூறினார்.
சமீப காலமாக, கொடூர கொலை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ராஜஸ்தான் உதய்பூரில் தையல்காரர் கன்னையா லால் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையும் படிக்க: போன் செய்த மோடி...கட்சியிலிருந்து விலகிய 8 மாதங்களில்...பாஜகவில் இணையும் அமரீந்தர் சிங்?
இதேபோல, மகாராஷ்டிரா அமராவதியில் அரங்கேறிய கொலை சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்