Crime : பாலியல் வன்கொடுமை செய்த பாதுகாப்பு படை வீரர்கள்.. குற்றவாளிகள் சொன்ன அதிர்ச்சி காரணம்..
மேற்கு வங்காளத்தில் இந்திய - வங்காளதேச எல்லையில் பெண்ணை 2 பாதுகாப்பு படை வீரர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் முக்கியமான மாநிலமான மேற்கு வங்காளத்தில் இந்தியா – வங்காளதேச எல்லை அமைந்துள்ளது. இந்தியா – வங்காளதேசத்தின் எல்லையில் பெரும்பாலான பகுதிகள் இந்த மாநிலத்தில் அமைந்துள்ளதால் எல்லையோர பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் தீவிரமாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவது வழக்கம்.
இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை மேற்கு வங்காளத்தில் உள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பக்டாவில் உள்ள இந்தியா – வங்காளதேச எல்லையை பெண் ஒருவர் அவரது குடும்பத்தினருடன் கடக்க முயற்சி செய்துள்ளார்.
அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அந்த பெண்ணையும், அவரது குடும்பத்தினரையும் மடக்கிப் பிடித்துள்ளனர். மடக்கிப் பிடித்த அவர்கள் இருவரும் அந்த பெண்ணை மட்டும் தனியான இடத்திற்கு வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, அந்த பெண் மேற்கு வங்க காவல்துறையினரிடம் புகார் அளித்தார்.
மேலும் படிக்க : 'இதோ பாருங்க உங்க பணம்'..... முதியவரின் கவனத்தை திசைத்திருப்பிய திருடர்கள்... தஞ்சையில் அதிர்ச்சி
போலீசார் விசாரணையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது எல்லைப் பாதுகாப்பு படையின் 68வது பட்டாலியனைச் சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் எஸ்.பி.சேரோ மற்றும் கான்ஸ்டபிள் அல்தாப் ஹொசைன் என்றும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மேற்கு வங்க காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்களே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மேற்கு வங்காளத்ததில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கு வங்காளத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், பா.ஜ.க.விற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. ககோலி கோஷ் தாஸ்டோய்தர் தனது டுவிட்டரில ஒரு இல்லத்தரசி 2 எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதுடன் மிரட்டப்பட்டும் உள்ளார். பா.ஜ.க.வின் அதிகார வரம்பில் இதுதான் பயங்கரமான உண்மை. ரக்ஷாக்கள் பக்தாஸ்களாக மாறியதற்கு யார் பொறுப்பு.? என்று பிரதமர் நரேந்திர மோடியை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க : கோவை : தமிழ்நாட்டை புரட்டி எடுத்த 870 கோடி ரூபாய் மெகா ஊழல்...இருவருக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை
மேலும் படிக்க : Crime: பதறவைத்த சம்பவம்.. 16 வயது சிறுமி கடத்தல்.. கூட்டு பாலியல் வன்கொடுமை.. அதிர்ந்த கிராமம்..