மான் வேட்டை வழக்கு: சல்மான்கான் மனு ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம்!
இதுதொடர்பான மனுக்கள் இனி ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்
1998ம் ஆண்டு அரியவகை மானை வேட்டையாடிய வழக்கில் சல்மான்கான் மனுவை இடமாற்றம் செய்ய ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அனுமதித்துள்ளது. இதுதொடர்பான மனுக்கள் இனி உயர்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்படும்.
பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் சல்மான் கான்.1998ம் ஆண்டு கங்கனி காடுகளில் இவர் ப்ளாக்பக் என்னும் அரியவகை மானை வேட்டையாடினார். இது தண்டனைக்குரிய குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணை நீதி மன்றத்தால் இவருக்கு இந்த குற்றத்தில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் தொடர்புடைய சைஃப் அலி கான் மற்றும் தபு இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர். வழக்கின் மேல்கட்ட விசாரணை ஜோத்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தற்போது இதில் சல்மான்கானின் மனு ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து அந்த நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டுள்ளது.
1998 blackbuck poaching case | Rajasthan High Court allows the transfer petition of actor Salman Khan. The pleas relating to the actor will now be heard in the High Court.
— ANI (@ANI) March 21, 2022
(File photo) pic.twitter.com/IBvaZ1JGEW
முன்னதக,
தனது பிறந்தநாளுக்கு முன்பு, சல்மான் கான் தனது பன்வெல் பண்ணை வீட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவரை விஷமற்ற பாம்பு கடித்துள்ளது. இச்சம்பவம் நேற்று அதிகாலை நடந்தது. உடனே, சல்மான் கான் காமோத்தேவில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டு, டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அவருக்கு விஷ எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டு, சில மணிநேர கண்காணிப்புக்குப் பிறகு வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.
சல்மான்கானை பாம்பு கடித்த தகவல் அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அது விஷமற்ற பாம்பு என்று தெரியவந்ததை தொடர்ந்து, ரசிகர்கள் நார்மல் மோடிற்கு வந்தனர். இந்நிலையில் பாம்பு கடித்த சம்பவம் குறித்தும் என்ன நடந்தது எனவும் சல்மான்கான் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அதில், பாம்பு கடித்த சம்பவம் என் அப்பாவுக்கு தெரிந்ததும் அவர் எனக்கு போன் செய்தார். பாம்பு உயிரோடு இருக்கிறதா என்று கேட்டார். நான் டைகரும் புலியும் உயிரோடு இருக்கிறோம் என்றேன். (சல்மான்கானை செல்லமாக டைகர் என்று ரசிகர்கள் அழைப்பார்கள்). பாம்பை அடித்தீர்களா என்று என் தந்தை கேட்டார். நாங்கள் எதுவும் காயப்படுத்தவில்லை. அந்த பாம்பை காட்டுக்குள் விட்டுவிட்டோம் என்றேன்.
பாம்பு அறைக்குள் வந்ததும் நான் ஒரு நீண்ட குச்சியை எடுத்து தூக்கி வெளியே விட்டுவிடலாம் என்று நினைத்தேன். என்னிடம் சிறிய குச்சிதான் இருந்தது. அதை வைத்து தூக்கினேன். அந்த பாம்பு அந்த குச்சி வழியாக சரசரவென மேலேறி என் கையருகே வந்துவிட்டது. பண்ணையில் வேலை பார்ப்பவர்கள் பாம்பு.. பாம்பு என கூச்சலிட்டார்கள்.
அந்த பாம்பு என்னை ஒருமுறை கடித்தது. மறுபடி அங்கிருந்தவர்கள் ஹாஸ்பிட்டல்.. ஹாஸ்பிட்டல் என கூச்சலிட்டனர். பாம்பு மீண்டு கடித்துவிட்டது. உடனடியாக மருத்துவமனை விரைந்தோம். அது விஷப்பாம்பு இல்லை என்பதால் சிக்கல் இல்லாமல் போய்விட்டது. அந்த பாம்பும் பயந்து இருந்தது. அதனால் தான் என்னைக் கடித்தது என்றார்.