வாட்ச்மேன் மகன் To கோடீஸ்வரன்; அடுத்த இலக்கு ஐஏஸ் அதிகாரி - 19 வயது இளைஞரின் எனர்ஜி கதை !
கேபிசி நிகழ்ச்சியின் 13ஆவது சீசனில் 19 வயது இளைஞர் ஒருவர் ஒரு கோடி ரூபாய் பரிசு வென்று அசத்தியுள்ளார்.
இந்தியாவில் நீண்ட ஆண்டுகளாக நடைபெற்று வரும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி என்றால் அது கோன் பனேகா கோரோர்பதி (கேபிசி) தான். பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருகிறார். அந்தவகையில் தற்போது 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் ஏற்கெனவே ஹிமானி பண்டேலா ஒரு கோடி ரூபாய் பரிசை வென்று அசத்தியிருந்தார்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் சஹில் ஆதித்யா அஹிர்வார் ஒரு கோடி ரூபாய் பரிசை வென்று அசத்தியுள்ளார். அவர் மிகவும் இக்கட்டான சூழலில் பிறந்த 19 வயது இளைஞர் இந்த நிகழ்ச்சியில் 1 கோடி ரூபாயை வென்று அசத்தியுள்ளார். அவர் சந்தித்த தடைகள் என்னென்ன?
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் பகுதியில் பிறந்தவர் சஹில். இவருடைய தந்தை உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வாட்ச்மேன் வேலை செய்து வருகிறார். தொடக்கத்தில் அனைவரை போலவும் சஹிலுக்கு படிப்பு மீது அதிகளவில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் அவர் பள்ளியை பாதியில் பங்க் செய்து விட்டு நண்பர்களுடன் சென்று விளையாடி கொண்டி வந்துள்ளார். அதன்பின்னர் தன்னுடைய குடும்ப சூழலை அறிந்த சஹில் படிப்பு தான் அவர்களுடைய குடும்பத்தை முன்னேற்றும் என்று உணர்ந்துள்ளார். அன்று முதல் தீவிரமாக படிக்க தொடங்கியுள்ளார். முன்பு ஒரு காலத்தில் தேர்வில் தேர்ச்சி மதிப் பெண்கள் எடுக்கவே தடுமாறிய சஹில் பின்னர் வகுப்பில் முதல் மாணவராக தேர்ச்சி அடைந்தார்.
அவருடைய திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன?
படிப்பு மீது ஆர்வம் இல்லாமல் இருந்த சஹிலின் திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன வென்று அமிதாப் பச்சான் இந்த நிகழ்ச்சியில் கேட்டுள்ளார். அதற்கு சஹில், “என்னுடைய ரோல் மாடல் என்னுடைய அப்பாதான். அவர் பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தாலும் எங்களுடைய குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக மற்றொரு மாநிலத்தில் பாதுகாவலர் வேலையில் இருந்து வருகிறார். அதை பார்க்கும் போது எனக்குள் ஒரு வெறி தோன்றியது. அதாவது எப்படியாவது படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை நல்ல நிலைக்கு அழைத்து செல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்தது” எனக் கூறியுள்ளார்.
மேலும் தன்னுடைய பட்டப்படிப்பிற்கு பின்பாக ஐஏஸ் தேர்வு எழுத உள்ளதாகவும் சஹில் கூறியுள்ளார். இதற்காக தயாராகும் போது தான் பொது அறிவு தொடர்பான புத்தக்கங்களை படித்துள்ளார். அந்தப் புதக்கங்கள் இவர் தற்போது கேபிசியில் ஒரு கோடி வெல்ல உதவியுள்ளன. இந்த நிகழ்ச்சியில் வென்றவர்களுக்கு கேட்கப்படும் 7 கோடி ரூபாய் ஜாக்பாட் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் தெரியவில்லை என்பதால் சஹில் 1 கோடி ரூபாயுடன் ஆட்டத்திலிருந்து வெளியேறினார். ஜாக்பாட் பரிசை பெறவில்லை என்றாலும் ஒரு கோடி பரிசை வென்றுள்ளது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 19 வயது இளைஞர் வென்றது தான் பெரிய ஆச்சரியமாக அமைந்துள்ளது.
மேலும் படிக்க:‛இப்போ தானே பேசி முடிச்சாரு...’ பிரதமர் மோடியின் உரைக்கு உடனே வந்த மீம்ஸ்!