100 ஆண்டுகள் பழமையான பாஸ்போர்ட் மீட்பு ! பின்னால் இருக்கும் மருத்துவக் கனவு !
பாஸ்கர் கங்காதர் கேல்கருக்கு, 1921 ஆகஸ்ட் 8ல், பிரிட்டிஷ் அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
புனேவில் 100 ஆண்டுகள் பழமையான பாஸ்போர்ட் ஒன்று தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அப்பாவின் பழைய பாஸ்போர்ட் :
புனேவில் கண் அறுவை சிகிச்சை நிபுணராக வேலை செய்து வருபவர் மருத்துவர் ஸ்ரீகாந்த். இவர் தனது அப்பாவின் 100 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த பாஸ்போர்டை மீட்க விரும்பியுள்ளார். அதாவது பழைய புகைப்படங்களை புதிதாக மாற்றுவோம் இல்லையா அதே போலத்தான். இதற்காக ஸ்ரீகாந்த் புனேவில் உள்ள பண்டார்கர் ஓரியண்டல் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் (BORI) என்னும் நிறுவனத்தை அணுகியுள்ளார். இந்த நிறுவனம் 28,000 பழமையான கையெழுத்துப் பிரதிகள் மற்றும் 1.5 லட்சம் புத்தகங்களை வைத்திருக்கிறது, பழைய புத்தகங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களைப் பாதுகாக்க உதவும் வகையில் பாரத் இதிஹாஸ் சன்ஷோதனுடன் இணைந்து இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்த் தனது தந்தையின் பாஸ்போர்ட்டை மீட்க விரும்பியதை கேட்டதும் , BORI நிறுவனம் அதனை செய்து முடித்துள்ளனர்.
பாஸ்போர்ட் உரிமையாளரைப் பற்றி :
மீட்கப்பட்ட பாஸ்போர்ட் 100 ஆண்டுகள் பழமையானது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில்
வழங்கப்பட்டது. பாஸ்போர்ட் உரிமையாள பெயர் பாஸ்கர் கங்காதர் கேல்கர். இவர் 1921 ஆம் காலக்கட்டத்தில் எம்.பி.பி.எஸ் படித்த மருத்துவர். மேற்படிப்பிற்காக லண்டன் போக விரும்பி, பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பித்திருக்கிறார். பாஸ்கர் கங்காதர் கேல்கருக்கு, 1921 ஆகஸ்ட் 8ல், பிரிட்டிஷ் அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 21, 1921 அன்று மும்பை , அதாவது அப்போதைய பம்பாயில் பாஸ்போர்ட்டை பெற்றிருக்கிறார் பாஸ்கர். அதன் பிறகு லண்டன் புறப்பட ஆயத்தமானவர், ஒரு மழை நாளில் எதிர்பாராத விபத்தை சந்தித்தார். அதன் காரணமாக அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால அவரால் லண்டன் படிப்பை மேற்க்கொள்ள முடியவில்லை. ஆனாலும் மகன் ஸ்ரீகாந்தை மருத்துவம் படிக்க வைத்து , பின்நாட்களில் அவருக்கு பயிற்சியிலும் உதவியாக இருந்திருக்கிறார்.
பாஸ்போர்ட் நிலை :
“பாஸ்போர்ட்டின் நிலை நன்றாக இல்லை. அதில் நிறைய கண்ணீர், புள்ளிகள் மற்றும் காகிதம் உடையக்கூடியதாக இருந்தது. அதன் ஆயுளை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளோம்,” என்றார் BORI தலைவர் பட்வர்தன். கிடப்பில் போடப்பட்ட பாஸ்போர்ட்டை BORI தற்போது 60 வருடங்கள் தாக்குப்பிடிக்கும் வகையில் மாற்றிக்கொடுத்துள்ளனர். காகிதத்தின் ஆயுளைப் பாதுகாக்க ரசாயனங்களைப் பயன்படுத்தி அதில் இந்த புள்ளிகள் மற்றும் கண்ணீரையும் அகற்றியுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்