மேலும் அறிய

Aadhar Linking: இன்றே கடைசி நாள், சம்பளம் வேண்டுமா?..உடனே வங்கிக் கணக்கை ஆதாருடன் இணையுங்கள்..!

நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் தாங்கள் சம்பளம் பெறும் வங்கிக் கணக்கை, ஆதார் உடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும்.

நூறு நாள் வேலை திட்டப் பயனாளிகள் தாங்கள் சம்பளம் பெறும் வங்கிக் கணக்கை,  ஆதார் உடன் இணைக்க இன்றே கடைசி நாளாகும்.

100 நாள் வேலை:

கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில் 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டு வரப்பட்டது.  இந்த திட்டத்தின் கீழ், ஒரு குடும்பத்தில் உள்ளவருக்கு ஒரு நிதியாண்டில் 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். சம்பந்தப்பட்ட ஊரக உள்ளாட்சிகளில் பணிவாய்ப்பு வழங்க தவறினால் ஊதியத்தை அபராதமாக வழங்கும் வகையில் விதிகள் உள்ளன. அதேநேரம், இந்த திட்டத்தில் பணியாளர்களுக்கான ஊதியம் வங்கிக் கணக்கு அடிப்படையிலும், ஆதார் கணக்கு அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால், வங்கிக் கணக்கின் கீழ், பணியாளர்கள் அளித்த வங்கிக்கணக்கில் பணம் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

மத்திய அரசு திட்டவட்டம்:

இந்த சூழலில் தான் ”கடந்த ஜனவரி மாதம் 30-ம் தேதியன்று, மத்திய ஊரக மேம்பாடு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், 2023, பிப்ரவரி 1ம் தேதி முதல், 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் ஊதியம் பெற, ஆதார் எண்ணை கொண்டு பணம் செலுத்தும் முறைகள்  கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிக் கணக்குடன் ஆதாரை இணைக்காதவர்களுக்கு ஊதியம் வழங்கப்படமாட்டாது. ஆதார் மற்றும் வங்கிக் கணக்கை இணைக்க ஆகஸ்ட் 31ம் தேதி தான் கடைசி நாள்” என்றும் திட்டவட்டமாக அறிவித்திருந்தது.

இன்றே கடைசி நாள்:

அதன்படி, வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்புக்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. 100 நாள் வேலை அட்டை, வங்கிக் கணக்கு, ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும். இதற்கான படிவத்தை வங்கியில் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும். வங்கிக் கணக்குடன் ஆதார் இணைக்காவிட்டால் சம்பளம் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவரை ஆதாருடன் வங்கிக் கணக்கை இணைக்காதவர்கள் இன்றைய கடைசி நாள் வாய்ப்பை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

முக்கியத்துவம் பெறும் ஆதார்:

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் அட்டை, தற்போது தனிமனிதனின் தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே ஆதார் அட்டையை பான் கார்ட் உடன் இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதற்காக பலமுறை அவகாசம் வழங்கப்பட்ட நிலையில்,  ஜுன் 30ம் தேதியுடன் அந்த அவகாசம் நிறைவடைந்தது. அந்த தேதிக்குள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படாத பான் கார்டுகள் அனைத்தும் தற்போது செயலிழக்க தொடங்கியுள்ளன. அதேபோல, ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கு இணைத்திருப்பதும் அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
வரலாற்று சாதனை படைத்த இந்தியாவின் முதல் பெண்! என்ன செய்தார் தெரியுமா?
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
ஓணம் பண்டிகைக்கு ஊருக்குப் போகப் போறீங்களா? ரயில்வே வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! முழு விவரம் உள்ளே!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
இனி கூகுள் பே, போன்பே செய்பவர்களுக்கு பேரதிர்ச்சியா? மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
CM விஜய் விடுத்த அழைப்பு.! நிராகரித்த திமுக, அதிமுக,தேமுதிக.! அப்போ யார் தான் கலந்துக்குவாங்க.?
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
Madurai ; 60 கோடி மீனாட்சி கோயில் சொத்து மோசடி: பத்திரப்பதிவு கும்பல் வலையில் மேலும் ஒருவர்!
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
CM Vijay: 9 அமைச்சர்கள்தான் தேறுவாங்க.. உளவுத்துறை ரிப்போர்ட்டால் கடுப்பில் முதலமைச்சர் விஜய்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
அம்பலமான நாடகம்..நடிகர் மோகன் சர்மா குறித்து குட்டி பத்மினி போட்டுடைத்த உண்மைகள்
TASMAC Liquor Bottles : மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக்.! டாஸ்மாக்கில் மதுபான விலை உயரப்போகிறது.? பாட்டிலுக்கு எவ்வளவு தெரியுமா.?
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
TN Weather News: சென்னையில் வெளுக்கப்போகும் மழை.. மற்ற மாவட்டங்களில்? - இன்றைய வானிலை நிலவரம்!
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
மதுரையில் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் போஸ்டர்கள்: தவெகவின் அடுத்த தலைவரா?
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
தந்தை இறந்த 2 நாட்களில் சிரித்தாரா? வைரலான வீடியோவால் விமர்சனத்தில் பிரதீப் ராவத்தின் மகன்
Embed widget