மேலும் அறிய

Headlines: ஒரு நிமிடத்தில் இன்றைய நாள்..! இன்று முழுவதும் நடந்தவை என்ன?

Headlines 10 PM: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கியச் செய்திகளை தலைப்புச் செய்திகளாக இங்கு பார்க்கலாம்.

தமிழ்நாடு:

  • தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் வரும் திங்கள் (டிச.19) மாலை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது.
  • தமிழ்நாடு அரசு கோரியுள்ள 90 லட்சம் கோமாரி தடுப்பூசியை விரைந்த் வழங்கக்கோரி மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
  • வரும் மக்களைத் தேர்தலில் பா.ஜ.க. - தி.மு.க. கூட்டணி வைக்க உள்ளதாக என்.எல்.சி போராட்டத்தில் அ.தி.மு.க. எம்.பி. சண்முகம் பேசியுள்ளார்.
  • தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி அமையும் என சி.வி.சண்முகம் விரக்தியில் பேசுவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
  • பிரதமர் மோடியை தரம் தாழ்ந்து விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு காங்கிரஸ், தி.மு.க. கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணிக்க மூத்த குடிமக்களுக்கு வரும் 21ஆம் தேதி முதல் கட்டணமில்லா டோக்கன் - மாநகரப் போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு.
  • வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் ஜனவரி 2ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
  • பால், நெய்யைத் தொடர்ந்து வெண்ணெய்யின் விலையும் உயர்வு. 
  • டேபிள், சமையல் வெண்ணெயின் விலை கிராமுக்கு ரூ.3 உயர்வு.
  • ஆவின் வெண்ணெய் விலை உயர்வுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம். ஆவின் பொருள்களை ஏழைகளுக்கு எட்டாக் கனியாக்கி பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்தும் நிலை உருவாகி உள்ளதாகக் கண்டனம்.
  • புதுச்சேரிக்கு போதிய நிதியின்றி திட்டங்களை நிறைவேற்ற இயலவில்லை. மாநில அந்தஸ்து இல்லாததால் வளர்ச்சி இல்லை - முதலமைச்சர் ரங்கசாமி வேதனை.
  • சபரிமலையில் மண்டல மற்றும் மகர விளக்கு காலத்தை முன்னிட்டு 17 ஆயிரம் பேர் தங்கஏற்பாடு.

இந்தியா:

  • பிரதமர் மோடியை மோசமாக விமர்சித்த பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோவுக்கு எதிராக நாட்டின் பல்வேறு இடங்களில் பாஜக போராட்டம்.
  • டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 48ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது.
  • பல்கலைக்கழங்களில் வேந்தராக இருக்கும் ஆளுநரை நீக்கவேண்டி கேரள சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் டிப்போவில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • சீனா போருக்கு தயாராகி வருவதாகவும் மத்திய அரசு தூங்குவதாகவும் விமர்சித்த ராகுல் காந்தியை மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தாக்கிப் பேசியுள்ளார்.

உலகம்:

  • ஜெர்மன் நாட்டின் தலைநகர் பெர்லினில் அமைக்கப்பட்டிருந்த உலகின் மிகப்பெரும் அக்வேரியம் வெடித்து சிதறியது.
  • அயர்லாந்து நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லியோ வராத்கர் இரண்டாவது முறையாக (டிச. 17) பதவியேற்றார்.
  • மலேசியாவில் நேற்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

விளையாட்டு:

  • உலக கோப்பை கால்பந்து: 3-வது இடத்திற்க்கான போட்டியில் குரோஷியா-மொராக்கோ அணிகள் மோதி வருகின்றன. முதல் பாதி முடிவில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
  • ப்ரோ கபடி லீக் போட்டியின் 9வது சீசனில் புனேரி பல்டன் அணியை முன்னாள் சாம்பியன்  ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது. 
  • பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மூன்றாவது முறையாக இந்திய அணி சாம்பியன் பட்டத்தினை வென்று உலக சாதனை படைத்துள்ளது.
  • இந்திய-வங்காளதேச அணிக்ளுக்கு இடையிலான முதலாவது டெஸ்டி போட்டியின் 4வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. இதில் வங்க தேச அணி 6 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளதால், வங்கதேச அணி வெற்றி பெற 241 ரன்கள் தேவைப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay on TN Assembly : ஆளுநருக்கு கண்டனம்!அதிமுகவுக்கு SUPPORT.. ஆட்டம் காட்டும் விஜய்RN Ravi Walkout : RN ரவியும்.. சட்டப்பேரவையும்அன்றும்... இன்றும் ஸ்டாலின் செய்த சம்பவம் TN AssemblyP Shanmugam CPI (M) History : வாச்சாத்தி போராளி! மாணவன் To தலைவன்! யார் இந்த பெ.சண்முகம்?RN Ravi Walkout : ஆளுநர் ரவி வெளிநடப்பு!’’தேசிய கீதம் அவமதிப்பு’’ உரையை வாசிக்காத ஆளுநர் : TN Assembly

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
UGC: இனி பல்கலை. துணைவேந்தரை ஆளுநரே முடிவு செய்வார்; மாநில அரசுகளுக்கு ஆப்பு வைத்த யுஜிசி!
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
GATE Admit Card: வெளியான கேட் பொறியியல் நுழைவுத்தேர்வு ஹால் டிக்கெட்; பெறுவது எப்படி?
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
Erode East: இன்னும் சற்று நேரத்தில்! ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு? அனல்பறக்கும் தமிழகம்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
HMPV Virus: சீனாவில் மீண்டும் ஊரடங்கா? உண்மையில் என்னதான் நடக்கிறது? தமிழர் தந்த நேரடி ரிப்போர்ட்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
Nepal earthquake : நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்..அதிர்ந்த கட்டிடங்கள்.. பீதியில் மக்கள்
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
இந்த வருஷம் 2 சூரிய கிரகணம், 2 சந்திர கிரகணம்! என்ன தேதி? என்ன நேரம்? எப்படி பாக்கலாம்?
Seeman:
Seeman: "ஆளுநர் தமிழ்நாட்டை விட்டு வெளியேறிவிடலாம்" - சீமான் ஆவேசம்
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Neeraj Chopra : ”யப்பா இந்த முடி இருக்கே.. முடில டா சாமி!” மனம் திறந்த நீரஜ் சோப்ரா
Embed widget