IPAC DMK Expenditure | 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக I PAC நிறுவனத்துக்கு அளித்தது ரூ.69 கோடியா?
பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்காக திமுக 69 கோடி ரூபாய் செலவு செய்ததாக வரும் தகவல் உண்மையானதா?
![IPAC DMK Expenditure | 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக I PAC நிறுவனத்துக்கு அளித்தது ரூ.69 கோடியா? Dmk spent 69 crore for Prashanth Kishores IPac in 2021 assembly elections? IPAC DMK Expenditure | 2021 சட்டமன்றத் தேர்தலில், திமுக I PAC நிறுவனத்துக்கு அளித்தது ரூ.69 கோடியா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/13/68d2262d9813555937aed342a4911bad_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரசாந்த் கிஷோர் நிறுவனத்திற்காக திமுக 69 கோடி ரூபாய் செலவு செய்ததா என்னும் கேள்விகள் எழும்பியுள்ளன.
இந்திய அரசியலில் தேர்தல் வியூகங்கள், ஆலோசகம் வழங்க கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளன. இப்படி தேர்தல் வியூகங்களில் செயல்பட்டு நாட்டு மக்களின் கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். அதன்பிறகு பல்வேறு அரசியல் கட்சிகளுக்கு ஐபேக் நிற்வனம் ஆலோசகம் வழங்கியது.
இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுகவுக்கு தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் நிறுவனம் இணைக்கப்பட்டு வெற்றியும் பெற்றது.
பிரசாந்த் கிஷோர் மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜிக்கும் தேர்தல் ஆலோசகராக இருந்து உள்ளார். இந்நிலையில், ஆலோசக நிறுவனங்களுக்காக ரூ.69 கோடி செலவிடப்பட்டிருக்கும் கணக்கு விவரங்கள் வெளியாகியுள்ளன. இதைவைத்து பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்திற்காக 69 கோடி ரூபாயை திமுக செலவு செய்திருக்கிறதா என்னும் கேள்வி எழும்பியுள்ளது. திமுகவின் வருடாந்தர தணிக்கை அறிக்கையில், தேர்தல் ஆலோசகர்களுக்கு வழங்கப்பட்ட தொகை 69 கோடி ரூபாய் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
I-PAC charged 69 crore as consultancy fees from DMK for the 2021 assembly elections ?!
— Arvind Gunasekar (@arvindgunasekar) January 13, 2022
DMK’s annual audit shows 69 crore as election expenditure through consultants. pic.twitter.com/bEw6CzjgXI
பிரசாந்த் கிஷோரின் செயல்பாடுகள், திமுக கட்சியின் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. திமுக தலைவர்களின் எந்த ஒரு விஷயத்தையும் பிரசாந்த் கிஷோர் கேட்கவில்லை என்ற பேச்சுக்களும் எழுந்தன. இந்நிலையில் திமுகவுக்கு என்று தனி தேர்தல் ஆலோசகம் பெற தனி நிறுவனம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியானது.
குஜராத் (பாஜக), பிகார் (ஐக்கிய ஜனதா தளம்), ஆந்திரப் பிரதேசம் (ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்), தமிழ்நாடு (திமுக), மேற்குவங்கம் (திரிணாமூல் காங்கிரஸ்), பஞ்சாப் (காங்கிரஸ்), டெல்லி (ஆம் ஆத்மி) என ஒப்பந்தம் போட்ட அரசியல் கட்சிகளை எல்லாவற்றின் வெற்றியிலும் பணிபுரிந்தது ஐபேக் என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்கட்சிகள், தேர்தல் ஆலோசக நிறுவனங்களுக்காக திமுக செலவழிப்பதும், அவர்கள் சொல்வதையே திமுக கேட்டு நடந்ததாகவும் விமர்சித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)